சமீபகாலமாக செல்போன் ரீசார்ஜ் திட்டங்களை அதிக விலை ஏற்றியதும் வாடிக்கையாளர்களை கவலை கொள்ளச் செய்து வருகிறது.

மொபைல் போன்களின் பிரீபெய்டு திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை 28 நாட்களில் இருந்து 30 நாட்களாக நிர்ணயிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

செல்போன் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத திட்டமாக வழங்கப்படும் வவுச்சர்கள் 28 நாட்களாகவே இருந்து வருகின்றன. இதனால் ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. இந்நிலையில் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 30 நாள் திட்டம் ஒன்றை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என டிராய் உத்தரவிட்டு உள்ளது.