தங்கத்தின்  மீதான கட்டுப்பாடு  .....!!  எது உண்மை ...?

தங்கத்தின்   மீதான  30 சதவீத  வரி , தற்போது 60  சதவீதமாக உயர்த்தியுள்ளது   மத்திய அரசு .

எப்பொழுது வரி ...?

வருமான  வரி சோதனையின் போது,  யாரேனும்  அதிக அளவில் தங்கம்  வைத்திருக்கும் போது, அதற்குண்டான வரி செலுத்தி   இருந்தால்  நகைகளை  பறிமுதல்  செய்யப்பட மாட்டது  என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் , கணக்கில்  வராத  கருப்பு  பணத்தில், அதிக அளவில்   தங்கம் வாங்கி  வைத்திருப்பதை  கண்டுபிடிக்கப்பட்டால் ,  நகைகளை  பறிமுதல்  செய்வதோடு, அதன்  மீது  அதிக  வரி  விதிக்கப்படும்  என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் , வருமானவரி திருத்த மசோதாவில்  நகைகளுக்கு   எந்த  கட்டுப்பாடும்  இல்லை  என  மத்திய  அரசு  தெரிவித்துள்ளது. அதாவது  இந்த  சட்டம்  ஏற்கனவே  அமலில்  உள்ளது.  இது வரை  யாரெல்லாம்  இந்த  சட்டத்தை   மதித்து  நடக்கவில்லையோ....இனியாவது  இந்த சட்டத்தின்படி  நடக்க  முன்  வர வேண்டும்  என  எதிர்பார்கபடுகிறது......

இதனால்  பொதுமக்கள்  யாரும்   பதற்றப்பட  வேண்டாம்......கணக்கில்  வரமால்  வைத்திருந்தால்  மட்டுமே  பிரச்னைச ...!!

அதன்படி ,   

பெண்கள் :

திருமணம்  ஆனவர்கள் -   62.5 சவரன்  (500  gram )

திருமணம் ஆகாதவர்கள் –  31.25 சவரன்  ( 250  gram )

ஆண்கள் :

ஆண்கள்   - 100 கிராம்,

500 கிராம்  மேல்  வைத்திருக்கும்  போதுதான்  இந்த  சோதனைகள் ....!! 

குறிப்பு : சொல்லப்போனால்,  தங்கம் வைத்திருக்க எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால்  கருப்பு  பணத்தில் ( கணக்கில்  வராத  பணத்தில்  வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டல் தான்  தலை வலி.....)

அதுமட்டும் இல்லாமல்,  பரம்பரை  பரம்பரையாக  வைத்திருக்கும் தங்கத்தின் மீது  எந்த  நடவடிக்கையும் எடுக்க படமாட்டாது என  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்னும்  பல  மாற்றங்கள்  வந்து கொண்டே தான்  இருக்கும் .......! காலம்  தான்  பதில்  சொல்லும்.......!!!