Asianet News TamilAsianet News Tamil

Gold Rate Today: மீண்டும் எகிறிய தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?

நகைப் பிரியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இன்றைய தங்கம் விலை என்று கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது.

Gold Rate Today in Check the Gold price in Chennai
Author
First Published Apr 12, 2023, 1:01 PM IST | Last Updated Apr 12, 2023, 6:04 PM IST

நகைப் பிரியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இன்றைய தங்கம் விலை என்று கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது.

தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை உயர்ந்திருப்பது நகை வாங்க நினைப்பவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்திருக்கிறது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று உயர்வு கண்டுள்ளது.

தங்கம் விலை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து 5,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு சவரன் 45,440 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,131 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 49,048 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது.

ரூபே கிரெடிட் கார்டு மூலம் யுபிஐ பேமெண்ட் செய்வது எப்படி?

வெள்ளி விலை:

வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 81 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 81,400 ரூபாய் விலைக்கு விற்பனையாகி வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios