gold rate today  :ஆபரணத்தங்கத்தின் விலை வாரத்தின் முதல்நாளான நேற்று சரிந்துள்ளது. கடந்த மே மாதம் 22ம் தேதியிலிருந்து ஆபரணத் தங்கம் கிராமுக்கு 42 ரூபாய் குறைந்துள்ளது.

gold rate today :ஆபரணத்தங்கத்தின் விலை வாரத்தின் முதல்நாளான நேற்று சரிந்துள்ளது. கடந்த மே மாதம் 22ம் தேதியிலிருந்து ஆபரணத் தங்கம் கிராமுக்கு 42 ரூபாய் குறைந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், தங்கத்தின் மீதான முதலீடு பக்கம் மக்கள் திரும்பி வருகிறார்கள்.
கடந்த மே 22-ம் தேதி 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4817க்கு விற்கப்பட்டது, சவரண் ரூ.38,536க்கு உயர்ந்தது. இந்த விலை உயர்வு படிப்படியாக அடுத்தடுத்த நாட்களில் அதிகரித்து மே 24ம்தேதி கிராம் ரூ.4,835வரை உயர்ந்தது. ஆனால், அதன்பின் படிப்படியாகக் குறைந்து வருகிறது. 

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.4,775க்கு விற்பனையானது, சவரண் ரூ.38,200க்கு விற்பனையானது. இது மே 30ம் தேதி நிலவரப்படி கிராமுக்கு ரூ.10 குறைவாகும். மே 30ம் தேதி ஆபரணத் தங்கம்கிராம் ரூ.4,785க்கும், சவரண் ரூ.38,280க்கும் விற்பனையானது.

வெள்ளி விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால் நேற்று வெள்ளி கிராம் ஒன்றுக்கு 50 பைசா அதிகரித்துள்ளது. இதன்படி, வெள்ளி கிராம் ரூ.67.50க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.67,500க்கு விற்பனையாகிறது. ஏறக்குறைய கிலோவுக்கு ரூ.500 அதிகரித்துள்ளது.
கடந்த மே 28ம் தேதி முதல் 30ம் தேதிவரை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ.67ஆகவும், கிலோ ரூ.67000 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.