தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.8,955-க்கு விற்பனையாகிறது

தங்கத்தின் விலை மேலும் சரிடைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சனிக்கிழமை அன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து, ரூ.71,840-க்கும், கிராம் ரூ.8,980-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்றும் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாததால் நகைக்கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் அபரணத்தங்கத்தின் விலை மேலும் சரிவடைந்துள்ளதால் அடித்தட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து சரியும் தங்கம்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 955 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 400 ரூபாய் சரிவடைந்துள்ளது. அதேபோல் 18 கேரட் தங்கம் விலை கிராமுக்கு 40 கிராம் குறைந்து 7 ஆயிரத்து 345 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 118 ரூபாயாக உள்ளது.

நகைக்கடைகளில் கூட்டம்

கோவை, திருச்சி மதுரை உள்ளிட்ட நகரங்களில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8,980 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை மேலும் சரிவடைந்ததால் மதுரை, கோவை, சேலம், திருச்சி பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.வளர்பிறை செண்டிமென்ட் காரணமாக தங்கம் வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களை பொதுமக்கள் வாங்கினர்.

விலை சரிவும் அதற்கான சர்வதேச காரணமும்

சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதி தங்கத்தை விற்க தொடங்கியதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆசிய, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் உலோகங்களில் முதலீடுகளை குறைத்து சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

வாரத்தின் முதல் நாளில் சர்வதேச சந்தைகள் சாதகமான நிலையை கொண்டிருந்தாலும், அன்னிய முதலீடுகள் குறித்த பாதகமான தகவல்கள் எதுவும் வெளியாகாததாலும் முதலீட்டாளர்கள் பங்கு சந்தை முதலீடுகளில் கவனம் செலுத்த தொடங்கினர். இதனால் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டது. இந்தியாவில் மூகூர்த்த நாட்கள் நெருங்கி வருதால் நடுத்தர வர்க்கத்தினர் நகைகள் உள்ளிட்டவற்றை வாங்க தொடங்கியுள்ள நிலையில் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக சென்னை மதுரை கோவை நெல்லை உள்ளிட்ட இடங்களில் உள்ள நகைக்கடைகள் காலை நேரத்திலேயே பிசியாக காணப்பட்டது. சில நகை கடைகளில் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது.

கடைசி ஐந்து நாளில் ஆபரணத் தங்கம் விலை நிலவரம்

08-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840

07-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840

06-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040

05-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040

04-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,720

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

08-06-2025- ஒரு கிராம் ரூ.117

07-06-2025- ஒரு கிராம் ரூ.117

06-06-2025- ஒரு கிராம் ரூ.118

05-06-2025- ஒரு கிராம் ரூ.114

04-06-2025- ஒரு கிராம் ரூ.114