உயர்ந்தது தங்கள் விலை..!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வந்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக சென்ற மாதத்தில் பலமுகூர்த்த நாட்கள் இருந்ததால், சுப நிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்கும் பெண்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். 

காரணம் சவரன் விலை.. 26 ஆயிரத்தையம் தாண்டி, 27 ஆயிரம் ரூபாயை தொடும் நிலையில் இருந்தது. இதற்கிடையில், அவ்வப்போது காலை மாலை என இரு வேளைகளிலும் தங்கம் விலை மாறுபாடு இருப்பதால் சில சமயம் மீண்டும் விலை உயர்ந்தும், சில சமயம் குறைந்தும் காணப்பட்டு வந்தது.

இந்த நிலையில் காலை நேர நிலவரப்படி மீண்டும் தங்கம் விலை உயர்ந்து உள்ளது. அதன் படி, 

ஒரு கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 3260 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து  26 ஆயிரத்து 96 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்...!

வெள்ளி விலையில் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லாமல்,கிராம் 40.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.