தங்கத்தின் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வரும் இந்த தருணத்தில் ஒரு சவரன் தங்க விலை தற்போது 27 ஆயிரத்தை கடக்க உள்ளது. 

ஒரே அடியாக உயர்ந்தது தங்கம் விலை..! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தங்கத்தின் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வரும் இந்த தருணத்தில் ஒரு சவரன் தங்க விலை தற்போது 27 ஆயிரத்தை கடக்க உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் கிராமுக்கு 62 ரூபாய் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் தான் ஒரு சவரன் விலை 25 ஆயிரத்தை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜூன் மாதம் 26 ஆம் தேதி 26 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தங்கம் உயர்ந்து, ஒரே நாளில் 900 ரூபாய் வரை அதிகரித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 62 ரூபாய் அதிகரித்து 3372 ரூபாய்க்கும், சவரன் ரூபாய் 26 ஆயிரத்து 976 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோன்று ஒரு கிராம் வெள்ளி 60 பைசா குறைந்து ரூபாய் 44.30 விலைக்கு விற்பனையாகிறது.