Asianet News TamilAsianet News Tamil

தங்கம் இவ்வளவு விலையா..? காலைல குறைந்து...மாலைல இப்படி ஆகிடுச்சே..!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வந்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக சென்ற மாதத்தில் பலமுகூர்த்த நாட்கள் இருந்ததால், சுப நிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்கும் பெண்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். 
 

gold rate increased by evening
Author
Chennai, First Published Jul 1, 2019, 4:54 PM IST

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வந்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக சென்ற மாதத்தில் பலமுகூர்த்த நாட்கள் இருந்ததால், சுப நிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்கும் பெண்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். 

காரணம் சவரன் விலை.. 26 ஆயிரத்தையம் தாண்டி, 27 ஆயிரம் ரூபாயை தொடும் நிலையில் இருந்தது. இதற்கிடையில், அவ்வப்போது காலை மாலை என இரு வேளைகளிலும் தங்கம் விலை மாறுபாடு இருப்பதால் சில சமயம் மீண்டும் விலை உயர்ந்தும், சில சமயம் குறைந்தும் காணப்பட்டு வந்தது.

இந்த தருணத்தில் வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று  தங்கத்தின் விலையில் ஓரளவிற்கு சரிவு ஏற்பட்டு உள்ளது.

gold rate increased by evening

இந்த நிலையில் காலை நேர நிலவரப்படி,

ஒரு கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 3212 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 25 ஆயிரத்து 696 ரூபாய்க்குவிற்கப்பட்டது. 

மாலை நேர நிலவரப்படி..! 

கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து, 3216 ரூயாகவும், சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்தும் விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம்...!

வெள்ளி விலையில் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லாமல், கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து 40.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது  

Follow Us:
Download App:
  • android
  • ios