உயர்ந்தது தங்கம் விலை......!! பொங்கல் நெருங்கும் வேளையில் மேலும் விலை உயர வாய்ப்பு ..!!!

கடந்த  வாரம்  வரை தங்கத்தின்  விலையில்  தொடர்ந்து  சரிவு காணப்பட்டது. பின்னர்  ஏற்ற  இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின்  விலையில்  தற்போது  உயர்வு காணப்பட்டு  வருகிறது. தற்போது  பொங்கல்  பண்டிகை  நெருங்குவதால், தங்கம்  வாங்குவதில்   மக்கள் அதிக ஆர்வம் காட்ட தொடங்கி  உள்ளனர் .

இதனை  தொடர்ந்து  தனகதின் விலை  தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.   

சென்ற  வாரம்   சவரன்  விலை 21 ஆயிரத்தை  நெருங்கியது.தற்போது இந்த வாரம்  சவரன் விலை 22  ஆயிரத்தை  நெருங்கும் தருவாயில்  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதன்படி , இன்றைய  காலை   நேர  நிலவரப்படி,

தங்கம் விலை நிலவரம் :

 22   கேரட் தங்கம்  கிராம் ஒன்றுக்கு 9  ரூபாய்  அதிகரித்து,  2  ஆயிரத்து 721   ரூபாயாகவும், சவரனுக்கு 72 ரூபாய்  அதிகரித்து,  21 ஆயிரத்து 768   ரூபாயாகவும், அதே  சமயத்தில், 24  கேரட், 10  கிராம்  சுத்த  தங்கம்  28 ஆயிரத்து 460  ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

வெள்ளி  விலை  நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி  43 ரூபாய் 10  பைசாவாகவும்

ஒரு கிலோ   பார்  வெள்ளி 40 ஆயிரத்து 285 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.