வேக வேகமாக உயரும் தங்கம் விலை..! 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்றைய மாலை நேர நிலவரப்படி, சவரனுக்கு ரூ.128 ரூபாய் குறைந்து இருந்தது. ஆனால், இன்று காலை நேர நிலவரப்படி, மீண்டும் தங்கம் விலை உயர்வு கண்டு உள்ளது.

இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.16 ரூபாய் உயர்ந்து  ரூ.3148 ஆகவும், சவரன் ரூ.25 ஆயிரத்து 184 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை நிலவரம்..! வெள்ளி கிராம் ஒன்றுக்கு, 20 காசுகள் உயர்ந்து ரூ 40.10 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.