Asianet News TamilAsianet News Tamil

Gold Rate Today: அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! நடுத்தர மக்கள் ஹேப்பி! நிலவரம் என்ன

தங்கம் விலை இன்று தொடர்ந்து 2வது நாளாக அதிரடியாகக் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக உயர்ந்தநிலையில் விலை குறைந்துள்ளது நடுத்தரக் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gold rate has dropped drastically: check rate in chennai, coimbatore and trichy
Author
First Published Feb 10, 2023, 11:41 AM IST

தங்கம் விலை இன்று தொடர்ந்து 2வது நாளாக அதிரடியாகக் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக உயர்ந்தநிலையில் விலை குறைந்துள்ளது நடுத்தரக் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு 55 ரூபாயும், சவரனுக்கு 440 ரூபாயும் விலை குறைந்துள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.63 சரிந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,375ஆகவும், சவரன், ரூ.43,000ஆகவும் இருந்தது.

ஊசலாட்டத்தி்ல் தங்கம் விலை! கொஞ்சூண்டு குறைவு! இன்றைய நிலவரம் என்ன?

Gold rate has dropped drastically: check rate in chennai, coimbatore and trichy

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வெள்ளிக்கிழமை) கிராமுக்கு 55 ரூபாய் சரிந்து ரூ.5,320ஆகவும், சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ரூ.42 ஆயிரத்து 560  எனச் சரிந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,320க்கு விற்கப்படுகிறது.

கடந்தவாரத்தில் தங்கம் விலை சவரன் ரூ.44 ஆயிரமாக உயர்ந்தபோது நடுத்தர குடும்பத்தினர் தவிப்பில் இருந்தனர். ஆனால், அடுத்த சிலநாட்களில் சரிந்து ரூ.42 ஆயிரத்துக்குள் வந்தது. ஆனால் மீண்டும் உயர்ந்து,  ரூ.43 ஆயிரத்தைக் கடந்ததது. 

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை அடுத்துவரும் கூட்டத்தில் உயர்த்தும் என்ற தகவலால் டாலர் வலுப்பெற்று வருகிறது, அந்நிய முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீட்டைக் குறைத்து பங்குப்பத்திரங்களிலும், கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால்தான் தங்கத்தின் தேவை குறைந்து விலை குறையத் தொடங்கியுள்ளது.  

12 நகரங்களில் QR கோட் முறையில் நாணயங்கள் வழங்கும் எந்திரம்: ஆர்பிஐ கவர்னர் அறிவிப்பு

Gold rate has dropped drastically: check rate in chennai, coimbatore and trichy

தங்கம் விலை இரு நாட்களில் கிராமுக்கு 63ரூபாய் குறைந்துள்ளது நடுத்தரக் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

வெள்ளி விலையில் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.73.50 ஆக இருந்தநிலையில் கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து, ரூ.72.50 ஆகவும், கிலோ ரூ.73,500 ஆக இருந்தநிலையில், கிலோவுக்கு ரூ.500 குறைந்து, ரூ.72,500 ஆகச் சரிந்துள்ளது.


 

Follow Us:
Download App:
  • android
  • ios