சவரனுக்கு வெறும் ரூ.16 குறைவு.! ஓவர் டென்ஷனில் மக்கள்...!

தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. சென்ற வாரம் தொடர் ஏறு முகத்தில்  இருந்து வந்த தங்கத்தின் விலை, மெல்ல மெல்ல உயர்ந்து சவரன் ரூ.26 ஆயிரத்தை கடந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில் தங்கம் விலை சற்று குறைய தொடங்கி   உள்ளது. 

இந்த நிலையில் காலை நேர நிலவரப்படி,

ஒரு கிராமுக்கு 2 ரூபாய் மட்டுமே குறைந்து 3252 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 16 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்...!

வெள்ளி விலையில் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லாமல், கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 40.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.