நேற்று மாலை கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 3627 ரூபாயாக இருந்தது. அப்படிப்பார்த்தால் சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 16 ரூபாய்க்கு விற்பனையானது.

கடந்த சில தினங்களாக தாறுமாறாக உயர்ந்து வந்த தங்கம் நிலையில் இன்று கிராமுக்கு 51 ரூபாய் குறைந்து உள்ளது. அதன்படி பார்த்தால் சவரனுக்கு 408 ரூபாய் குறைந்து உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நேற்று மாலை கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 3627 ரூபாயாக இருந்தது. அப்படிப்பார்த்தால் சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 16 ரூபாய்க்கு விற்பனையானது.நேற்று சவரன் விலை 29 ஆயிரத்தை கடந்ததால் வரலாற்றில் புதிய உச்சம் அடைந்து உள்ளது என்பதை காட்டுகிறது.இப்படியே சென்றால் இன்னும் சில நாட்களில் 30 ஆயிரத்தைத் தாண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது.

அதே நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றாலும் கூட இன்றைய நிலவரப்படி குறைந்தது 30 முதல் 34 ஆயிரம் ரூபாய் ஆகும் நிலை ஏற்பட்டு உள்ளது இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராம் ரூ. 3576.00 (-51 ரூபாய் குறைவு), சவரனுக்கு 408 குறைந்து, 28 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 1.60 குறைந்து 47.40 ரூபாயாக உள்ளது.