இன்று ஒரே நாளில் சவரனுக்கு 40 ரூபாய் குறைவு !!!
தங்கத்தின் விலையில், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.
கடந்த சில தினங்களாக , சற்று குறைவான விலையில் தங்கம் விற்பனை யானது. தற்போது சில நாட்களாக தொடர்ந்து , தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
இதனை தொடந்து இன்றைய மாலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் , கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து , 2 ஆயிரத்து 897 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 23,176 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம் 30 ஆயிரத்து 980 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி 46 ரூபாய் 80 காசுக்கும் ,
ஒரு கிலோ பார் வெள்ளி 43 ஆயிரத்து 705 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
