சர்வதேச  அளவில்  தங்கத்தின் விலை சரிந்து  காணப்படுவதால், நேற்று முன்தினம் 22,736    ரூபாயில் இருந்த ஒரு சவரன் நேற்று 22,640  ரூபாய்க்கு  விற்கப்பட்டது.

இதனை தொடர்ந்து , இன்றைய  மாலை  நேர  நிலவரப்படி,  22 கேரட் ஒரு கிராம்  1 ரூபாய்  குறைந்து, 2 ஆயிரத்து 829 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அதாவது,சவரனுக்கு  ரூபாய்  8  குறைந்து,  22 ஆயிரத்து 632   ரூபாய்க்கும்  விற்கப்படுகிறது.

10  கிராம்  சுத்த தங்கம்,  30 ஆயிரத்து   260 ரூபாய்க்கும்  விற்கப்படுகிறது.

வெள்ளி விலை  நிலவரம்:

ஒரு  கிராம்  வெள்ளி 44 ரூபாய் 70 காசுக்கும் ,

ஒரு கிலோ பார் வெள்ளி 41 ஆயிரத்து  800 ரூபாய்க்கும் விற்கபடுகிறது.

மேலும்  சில  நாட்களுக்கு, தங்கத்தின்  விலை சற்று இறங்கு முகத்தில் காணப்படும் என  செய்திகள் வெளியாகி உள்ளது.

அதேசமயத்தில், பண்டிகை  காலம்  நெருங்குவதால்,  பண்டிகையையொட்டி விலை  உயரவும்  வாய்ப்பு  உள்ளது.........