கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக சவரன் ரூபாய் 26 ஆயிரம் என்ற அளவில் இருந்தது.  தற்போது 29 ஆயிரத்தை கடந்து விற்பனை ஆகிறது.

செய்கூலி சேதாரம் சேர்த்து ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா..? தொடர் விலை உயர்வால் பதறும் பொதுமக்கள் .!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டதிலிருந்து சவரன் விலை 2,500 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்து விற்கப்பட்டு வருகிறது.இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக சவரன் ரூபாய் 26 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. தற்போது 29 ஆயிரத்தை கடந்து விற்பனை ஆகிறது. இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என அனைத்தும் சேர்த்து 33 முதல் 34 ஆயிரம் ரூபாய் ஆகும் என்ற நிலை உருவாகி இருப்பதாக பொதுமக்கள் பெரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி கிராமத்து 16 ரூபாய் உயர்ந்து விற்பனையாகிறது

காலை நேர நிலவரப்படி, 

ஒரு கிராம் ரூ. 3718.00(16 ரூபாய் உயர்வு), சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

வெள்ளி விலை நிலவரம் 

40 பைசா உயர்ந்து 52.40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது