இன்று சவரனுக்கு 56 ரூபாய் அதிகரிப்பு ........!!!

தீபாவளி நெருங்க நெருங்க , தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக காணப்படுகிறது. இந்நிலையில், நேற்றைய தினத்தோடு ஒப்பிடுகையில், இன்றைய காலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் , கிராம் ஒன்றுக்கு 7 ரூபாய் அதிகரித்து, 2 ஆயிரத்து 829 ரூபாயாகவும், சவரனுக்கு, ரூபாய் 56 அதிகரித்து, 22 ஆயிரத்து 632 ரூபாய்க்கும் விற்பனை செய்யபடுகிறது.

24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம் 30 ஆயிரத்து 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 45 ரூபாய் 30 காசுக்கும் , ஒரு கிலோ பார் வெள்ளி 42 ஆயிரத்து 290 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.