இந்த வார தொடக்கத்தில் அதிகரித்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. இதனால் திருமண ஏற்பாடுகள் செய்பவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தங்கம் விலை குறைவு நடுத்தர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டென மாறிய தங்கம் விலை
இந்த வார தொடக்க நாட்களில் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து காணப்பட்டது. இதனால் முகூர்த்த நாட்கள் தொடங்கவுள்ளதால் திருமண ஏற்படு செய்து வருபவர்கள் இதனால் அச்சம் அடைந்தனர்.இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகளும், நடுத்தர அடித்தட்டு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சவரனுக்கு ரூ.280 சரிவு - பெண்கள் மகிழ்ச்சி
தங்கம் விலையில் இன்று சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக உயர்ந்த நிலையில் விற்பனையாகி வந்த தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. இதன் விளைவாக, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.71,800 இருந்து ரூ.71,520 ஆக குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 940 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ₹71,520க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல் மதுரை, கோயம்புத்தூர், நெல்லையில் ஒரு கிராம் தங்கம் விலை 8,975 ரூபாயாக உள்ளது.கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை விலையில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் நடுத்தர வர்க்க மக்களின் முதல் சேமிப்பு, முதலீடு என்று தங்கத்தை மட்டுமே சொல்ல முடியும். எந்த வகையான அவசரமாக இருந்தாலும் தங்கத்தை அடமானம் வைத்து பணம் திரட்டி கொள்ளலாம் என்பதால், மக்கள் நம்பிக்கையுடன் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
திருமண சீசன் துவக்கம்
இன்னும் 2 வாரங்களில் திருமண சீசன் தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் பலரும் தங்கம் வாங்க தொடங்கிவிடுவார்கள். இதனால் தங்கம் விலை குறைந்தால், மக்களிடையே கூடுதல் உற்சாகம் ஏற்படும். நேற்று தங்கம் விலை ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.71,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.112க்கு விற்பனையானது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.8,940க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.71,520க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
