சர்வதேச பொருளாதார காரணங்களால் தங்கத்தின் விலை சரிந்துள்ளது. முகூர்த்த நாட்கள் நெருங்கும் வேளையில் இந்த விலை சரிவு மக்களுக்கு நன்மையாக அமைந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ₹60 குறைந்து ₹8,935-க்கு விற்பனையாகிறது.

நேற்று ஏற்றம் இருந்த நிலையில், சர்வதேச பொருளாதார காரணங்களால் ஆபரணத்தங்கத்தின் விலையில் சரிவு காணப்படுகிறது. முகூர்த்த நாட்கள் தொடங்கவுள்ள நிலையில் இந்த விலை சரிவு அடித்தட்டு மக்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. நேற்று தங்கத்தின் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில் இந்த திடீர் விலை குறைவால் திருமணம், காதுகுத்து, உள்ளிட்ட வீட்டு விசேஷம் வைத்திருந்தோர் மகிழ்ச்சியல் ஆழ்ந்துள்ளனர்.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 935 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ₹71 ஆயிரத்து 480 ரூபாயக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இது நேற்றைய விலையை விட 480 ரூபாய் குறைவாகும். அதேபோல் மதுரை, கோவை, நெல்லையில் ஒரு கிரா தங்கம் விலை மாற்றம் இல்லாமல் 8,935 ரூபாயாக உள்ளது. அதேபோல் வெள்ளி மாற்றம் இல்லாமல் 1 கிராம் 111 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதி தங்கத்தை விற்க தொடங்கியதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆசிய, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் உலோகங்களில் முதலீடுகளை குறைத்து சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

வாரத்தின் முதல் நாளில் சர்வதேச சந்தைகள் சாதகமான நிலையை கொண்டிருந்தாலும், அன்னிய முதலீடுகள் குறித்த பாதகமான தகவல்கள் எதுவும் வெளியாகாததாலும் முதலீட்டாளர்கள் பங்கு சந்தை முதலீடுகளில் கவனம் செலுத்த தொடங்கினர். இதனால் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டது. இந்தியாவில் மூகூர்த்த நாட்கள் நெருங்கி வருதால் நடுத்தர வர்க்கத்தினர் நகைகள் உள்ளிட்டவற்றை வாங்க தொடங்கியுள்ள நிலையில் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக சென்னை மதுரை கோவை நெல்லை உள்ளிட்ட இடங்களில் உள்ள நகைக்கடைகள் காலை நேரத்திலேயே பிசியாக காணப்பட்டது. சில நகை கடைகளில் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது.

இந்தியாவையும் தங்கத்தின் சென்டிமென்டையும் பிரிக்கவே முடியாது என கூறும் சந்தை நிபுணர்கள், தங்கத்தின் விலை சரிவை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் அறிவுறுத்தியுள்ளனர். மதலீட்டுக்காக அல்லாமல் திருமணம் உள்ளிட்ட தேவைகளுக்கு நகைகளை வாங்குவோர் இந்த விலை குறைப்பை சரியாக பயன்படுத்தி லாபம் பார்க்க வேண்டும் என தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜுலாணி தெரிவித்துள்ளார்.