தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் சவரணுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் சவரணுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தங்கம் விலை இன்று கிராமுக்கு 20ரூபாயும், சவரனுக்கு 160 ரூபாயும் குறைந்துள்ளது
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,685 ஆகவும், சவரன், ரூ.37,480 ஆகவும் இருந்தது. 

ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை! குழப்பத்தில் மக்கள்! இன்றைய நிலவரம் என்ன?

இந்நிலையில் வெள்ளிக்கிழமை (இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 20 ரூபாய் சரிந்து, ரூ.4,665ஆக குறைந்தது. சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.37,320ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. 
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,665க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை இந்த வாரம் ஏற்றத்துடன் தொடங்கினாலும் அது நீடிக்கவில்லை. புதன்கிழமையிலிருந்து தங்கம் விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.

தங்கம் விலை படிப்படியாக உயர்வு! சவரனுக்கு 2 நாட்களில் ரூ.120 அதிகரிப்பு: இன்றைய நிலவரம் என்ன

இந்த விலை குறைவு அடுத்தடுத்த நாட்களும் நீடிக்குமா என்று நகைப்பிரியர்கள் ஆர்வத்தில் உள்ளனர். பண்டிகைக் காலம் நெருங்குவதால் விலை குறைந்துவருவதால் நகை வாங்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது

தங்கம் விலை திடீர் வீழ்ச்சி! சவரனுக்கு ரூ.360 குறைவு: இன்றைய நிலவரம் என்ன?

அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் கூட்டத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவீதம் உயர்த்தப்படும் நிலையில் தங்கம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளி விலை அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, ரூ.61.50 ஆகவும், கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.61,500 ஆகவும் விற்கப்படுகிறது