தங்கம் விலை கடந்த 3நாட்களுக்குபின் இன்று சற்று குறைந்துள்ளது. இருப்பினும் சவரன் ரூ.40ஆயிரத்துக்கு கீழ் குறையாதது நடுத்தரக் குடும்பத்தினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை கடந்த 3நாட்களுக்குபின் இன்று சற்று குறைந்துள்ளது. இருப்பினும் சவரன் ரூ.40ஆயிரத்துக்கு கீழ் குறையாதது நடுத்தரக் குடும்பத்தினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தங்கம் விலை இன்று கிராமுக்கு 4 ரூபாயும், சவரனுக்கு 32 ரூபாயும் குறைந்துள்ளது. 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,955ஆகவும், சவரன், ரூ.40,160 ஆகவும் இருந்தது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(சனிக்க்கிழமை) கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ரூ.5,016 ஆகவும், சவரனுக்கு 32 ரூபாய் சரிந்து ரூ.40 ஆயிரத்து 128ஆக அதிகரித்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,016க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை தொடர் அதிகரிப்பு! நடுத்தர குடும்பத்தினருக்கு ஷாக்! வெள்ளி விர்ர்! நிலவரம் என்ன?

அமெரிக்கப் பங்குப்பத்திரங்களில் இருந்து கிடைக்கும் ஆதாயம் குறைந்துள்ளதையடுத்து, முதலீட்டாளர்கள் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. கச்சா எண்ணெய் விலையும் பெரிதாக உயரவில்லை என்பதால், நிலையான முதலீடாக இருக்கும் தங்கத்தின் பக்கம் கவனம் திரும்பியதால் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த தொடர் விலை உயர்வு, தங்க வாங்க நினைப்போருக்கும், நடுத்தரக் குடும்பத்தினருக்கும் பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் தங்கம் சவரனுக்கு 752 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. இன்று சவரனுக்கு 32 ரூபாய் குறைந்தாலும், தங்கம் விலை சவரன் ரூ.40ஆயிரத்துக்கு கீழ் குறையவில்லை என்பது மிடில்கிளாஸ் மக்களின் ஏக்கமாக இருக்கிறது.

உச்சத்தில் தங்கம் விலை! சவரன் ரூ.40ஆயிரத்தைக் கடந்தது! நிலவரம் என்ன?

வெள்ளி விலையில் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 60 காசு உயர்ந்து, ரூ.71.60 ஆகவும், கிலோவுக்கு ரூ.600 அதிகரித்து, ரூ.71,600 ஆகவும் ஏற்றம் கண்டுள்ளது