Asianet News TamilAsianet News Tamil

Gold Rate Today: தங்கம் விலை தொடர் வீழ்ச்சி ! நடுத்தரக் குடும்பத்தினர் ரிலாக்ஸ்! இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. விலை உயர்ந்து வருகிறது என கவலைப்பட்ட நடுத்தரக் குடும்பத்தினர் மனநிம்மதி அடைந்துள்ளனர்.

Gold price has dropped for the fourth day in a row: check details in chennai, kovai, vellore and trichy
Author
First Published Nov 21, 2022, 10:22 AM IST

தங்கம் விலை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. விலை உயர்ந்து வருகிறது என கவலைப்பட்ட நடுத்தரக் குடும்பத்தினர் மனநிம்மதி அடைந்துள்ளனர்.

தங்கம் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாயும், சவரனுக்கு 40 ரூபாயும் குறைந்துள்ளது.

Gold Rate Today: தங்கம் விலை ஊசலாட்டம்! சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது! நிலவரம் என்ன?

Gold price has dropped for the fourth day in a row: check details in chennai, kovai, vellore and trichy

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,925ஆகவும், சவரன், ரூ.39,400 ஆகவும் இருந்தது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(திங்கள்கிழமை) கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து ரூ.4,360 ஆகவும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, ரூ.39 ஆயிரத்து 360 ஆகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,920க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை 2வது நாளாகச் சரிவு! 2 நாளில் 200 ரூபாய் குறைந்தது! நிலவரம் என்ன?

Gold price has dropped for the fourth day in a row: check details in chennai, kovai, vellore and trichy

தங்கம் விலை கடந்த வாரத்தில் இருந்தே ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. தீபாவளிக்குப்பின் தங்கம் விலை திடீரென உயரத் தொடங்கி சவரன் 39ஆயிரத்தைக் கடந்தது. ஆனால், கடந்த வாரத்தில் கடும் ஏற்ற, இறக்கம் இருந்தது. இதனால் தங்கம் விலையைக் கணிக்க முடியாத சூழல் இருந்தது. கடந்த வாரத்தின் கடைசி 3 நாட்கள் தங்கம் விலை சரியத் தொடங்கியது, இந்த சரிவு இந்த வாரத்தின் தொடக்கமான இன்றும் நீடிக்கிறது.

கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.450 குறைந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து சரிந்துவருவது நடுத்தரக் குடும்பத்தினருக்கும், நகை வாங்க விரும்புவோருக்கும் ஆறுதலையும், மனநிம்மதியையும் அளித்துள்ளது. 

குறிப்பாக அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி வீதம் குறித்த அறிவிப்பு இந்த வாரத்தில் வர உள்ளது, சீனாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு போன்றவை தங்கம் முதலீட்டில் முதலீட்டாளர்கள் ஆர்வமில்லாமல் உள்ளனர். அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்புக்குப்பின் தங்கம் விலையில் மாறுபாடு ஏற்படலாம் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Gold price has dropped for the fourth day in a row: check details in chennai, kovai, vellore and trichy

தங்கம் விலை 2வது நாளாகச் சரிவு! 2 நாளில் 200 ரூபாய் குறைந்தது! நிலவரம் என்ன?

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ரூ.67.50 ஆக இருந்தநிலையில் ஒரு ரூபாய் குறைந்து, ரூ.66.50ஆகவும், கிலோவுக்கு ரூ.1,000 சரிந்து, ரூ.66,500 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios