தங்கம் விலை இன்று குறைந்து நடுத்தரக் குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது, சவரன் ரூ.42 ஆயிரத்துக்கு கீழ் சரிந்துள்ளது

தங்கம் விலை இன்று குறைந்து நடுத்தரக் குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது, சவரன் ரூ.42 ஆயிரத்துக்கு கீழ் சரிந்துள்ளது
கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.280 சரிந்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தங்கம் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாயும், சவரனுக்கு 240 ரூபாயும் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,275ஆகவும், சவரன், ரூ.42,200ஆகவும் இருந்தது.

தங்கம் விலை நிலவரம்| நடுத்தர மக்களுக்கு நிம்மதி! வெள்ளி விலை என்ன?

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வியாழக்கிழமை) கிராமுக்கு 30 ரூபாய் சரிந்து ரூ.5,245ஆகவும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ரூ.41 ஆயிரத்து 960ஆகக் வீழ்ந்துள்ளது.கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,245க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் குறைந்துள்ளது நடுத்தரக் குடும்பத்தினருக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.280 சரிந்து நீண்ட நாட்களுக்குப்பின் சவரன் ரூ.42 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. 

அமெரிக்க பணவீக்கத்தைக் குறைக்க பெடரல் ரிசர்வ் மார்ச் மாதத்தில் வட்டியை 50 புள்ளிகள் உயர்த்த உள்ளது. இந்தத் தகவலால் நேற்று பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. 

தங்கம் விலை தொடர் சரிவு| சவரனுக்கு ரூ.120 குறைந்து:நிலவரம் என்ன

இதனால் அமெரிக்கப் பங்குப்பத்திரங்கள், கடன் பத்திரங்கள் மதிப்பும் உயர்ந்துள்ளது, முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான கவனத்தை கடன்பத்திரங்கள் மீது திருப்பியுள்ளனர். இதனால் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது, அதுமட்டும்லாமல் முகூர்த்த காலம் முடிந்தது, பண்டிகைக் காலம் முடிந்ததும் தங்கத்தின் தேவை குறையக் காரணமாகும்.

தங்கம் விலை சவரன் ரூ.42 ஆயிரத்துக்கு கீழ் வராமல் இருந்தநிலையில் இப்போது வந்துள்ளது நகைப்பரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்.

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.72.00 ஆக இருந்தநிலையில் கிராமுக்கு 50 பைசா குறைந்து, ரூ.71.50 ஆகவும், கிலோ ரூ.72,000 ஆக இருந்தநிலையில் கிலோவுக்கு ரூ.500 சரிந்து, ரூ.71,500 ஆகவும் வீழ்ச்ச்சி அடைந்துள்ளது.