Gold,Silver Price Today: தங்கம் விலை 2வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு 250 ரூபாயக்கு மேல் அதிகரித்து, நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது

Gold,Silver Price Today: தங்கம் விலை 2வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு 250 ரூபாயக்கு மேல் அதிகரித்து, நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தங்கம் விலை இன்று கிராமுக்கு 32 ரூபாயும், சவரனுக்கு 256 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,323ஆகவும், சவரன், ரூ.42,584ஆகவும் இருந்தது.

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்வு! எட்டாத உயரம், தவிக்கும் மிடில் கிளாஸ்: நிலவரம் என்ன

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செவ்வாய்க்கிழமை) கிராமுக்கு 32 ரூபாய் உயர்ந்து ரூ.5,355ஆகவும், சவரனுக்கு 256 ரூபாய் அதிகரித்து ரூ.42 ஆயிரத்து 840 ஆக அதிகரித்துள்ளது
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,355க்கு விற்கப்படுகிறது.

சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு குறைந்து, டாலர் மீதான முதலீட்டு ஆர்வம் குறையத் தொடங்கியநிலையில், முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. உலகின் தங்கம் நுகர்வோரில் 2வது பெரிய நாடான சீனாவில் பொருளாதாரம் இயல்புநிலைக்கு திரும்பியிருப்பதும் தங்கத்தின் தேவையை அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

கொஞ்சூண்டு குறைந்த தங்கம் விலை! இதெல்லாம் ஆறுதல் தருமா? இன்றைய நிலவரம் என்ன

வெள்ளி விலையில் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.74.70ஆக இருந்தநிலையில் 70 பைசா சரிந்து ரூ.74.00ஆகவும், கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.74 ஆயிரமாக உள்ளது