Asianet News TamilAsianet News Tamil

Education loan :மாணவர்களே! உயர் கல்விக்கு கடன் வேணுமா? இதோ 7% குறைவாக வட்டி விதிக்கும் வங்கிகள் பட்டியல்

இந்தியாவில் கல்விமேல் படிப்பு எப்போதும் காஸ்ட்லியாக இருக்கிறது. மருத்துவம், மருத்துவ மேற்படிப்பு, வெளிநாடுகளில் சென்று படிப்பது என அனைத்துக்கும் அதிகமாக பணம் செலவாகும். 

Going for higher education? Check out where to get education loans below 7%
Author
New Delhi, First Published Feb 25, 2022, 5:44 PM IST

இந்தியாவில் கல்விமேல் படிப்பு எப்போதும் காஸ்ட்லியாக இருக்கிறது. மருத்துவம், மருத்துவ மேற்படிப்பு, வெளிநாடுகளில் சென்று படிப்பது என அனைத்துக்கும் அதிகமாக பணம் செலவாகும். 

நடுத்தரக் குடும்பத்தினரைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு பணம் புரட்டுவது பிரச்சினையாக இருக்கும்போது எதிர்கால கனவுகளை நனவாக்க உதவுவது வங்கிகள்மட்டும்தான். வங்கிகள் மாணவர்களின் கடனுக்காக கல்விக்கடன்களை வழங்கி அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய உதவுகின்றன. மாணவர்களுக்கு நல்ல கல்வித்திறன், மதிப்பெண், ஓரளவுக்கு வசதிவாய்ப்புகள் இருந்தால், கல்விக்கடன் பெறுவது எளிது. 

Going for higher education? Check out where to get education loans below 7%

அதிலும் வங்கியில் பெறுகின்ற கல்விக்கடனுக்கான வட்டி அதிகமாக இல்லாமல் இருப்பதும், வட்டி செலுத்தும் தொகையோடு, அசலையும் செலுத்துவகையில் இருக்க வேண்டும்.

 பள்ளிக்கூடத்தில் சிறப்பான மதிப்பெண், முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்விக் கடன் கிடைப்பதில் சிக்கல் இருக்காது, அதிலும் குறைந்தவட்டியில், நீண்டகாலத்தில் செலுத்தும் வகையில் இருக்கும். பெரும்பாலான வங்கிகள் மாணவர்களின் கல்வித்திறன், திருப்பிச் செலுத்தும் தகுதி, குடும்பச்சூழல் ஆகியவற்றை மதிப்பீடு செய்தேகல்விக்கடன் வழங்குகின்றன.

அனைத்துவிதமான மாணவர்களுக்கும் கல்விக்கடன் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. ஒவ்வொரு  வங்கிகளும் ஒவ்வொருவிதமான அளவுகோல், விதிமுறைகள் வகுத்திருப்பதால், கடன் கிடைப்பதன் காலஅளவு வேறுபடலாம். கல்விச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவை சரியாக இருக்கும்பட்சத்தில் கல்விக்கடனை வங்கிகள் மறுக்கமுடியாது. அதுமட்டுமல்லாமல் கடந்தகாலங்களில் பள்ளிகளில், கல்லூரிகளில் படித்த சான்றிதழ், நுழைவுத்தேர்வு மதிப்பெண், சான்றிதழ்கள் வங்கிஅதிகாரிகள் சரிபார்ப்புக்கு அவசியம்.

Going for higher education? Check out where to get education loans below 7%

கல்விக்கடனுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 18 வயதுமுதல் 35 வயதுக்குள்ளவர்களாகஇருத்தல் அவசியம். பெற்றோர் வருமானம் நிலையாக இருத்தல் வேண்டும், படிக்கப்போகும் கல்லூரி, பல்கலைக்கழகங்கள்அரசால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும், வெளிநாடு செல்வதால் அந்நாட்டு அரசால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ரூ.50 லட்சம்வரை உள்நாட்டில் படிப்பதற்கு கடன்பெறமுடியும், வெளிநாடுகளில் சென்று கல்விபயிலும் போது ரூ.ஒருகோடிவரை கடன்பெற்று படிக்கச் செல்லலாம். கடன்வாங்குவோர் கல்வித்தகுதி, பெற்றோர்வருமானம், கிரெடிட்ஸ்கோர் உள்ளிட்டவை கடன் வழங்குவதை தீர்மானிக்கும்.
கல்விக்கடன் பெற்றாலும் எப்போதிருந்து திருப்பிச்செலுத்துவது என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். கல்விக்கடன் பெற்றுபடித்து, வருமானம்ஈட்டும்போது, வருமானவரி செலுத்துவதில் 80இ பிரிவின்கீழ் சலுகையும்கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.20 லட்சம் வரை கல்விக்கடன் பெறுவோருக்கு 7சதவீதம் வட்டியில் கடன் வழங்கும் வங்கிகள் பட்டியல் தரப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு
 

வங்கி பெயர்

வட்டிவீதம்

இஎம்ஐ

எஸ்பிஐ

6.70%

ரூ.29,893

பேங்க் ஆஃப் பரோடா

6.75

ரூ.29,942

பிஎன்பி

6.75%

ரூ.29,942

ஐடிஐபி

6.75%

ரூ.29,942

யூனியன் வங்கி

6.80%

ரூ.29,990

சென்ட்ரல் வங்கி

6.85%

ரூ.30,039

பேங்க்ஆப்இந்தியா

6.85%

ரூ.30,039

கனராவங்கி

6.90%

ரூ.30,088

பேங்க்ஆப் மகாராஷ்டிரா

6.95%

ரூ.30,136

இந்தியன் வங்கி

7.00%

ரூ.30,185

பஞ்சாப் அன்ட் சிந்துவங்கி

7.%

ரூ.30,185

ஐஓபி

7.25%

ரூ.30,430

Follow Us:
Download App:
  • android
  • ios