Asianet News TamilAsianet News Tamil

GI tag:பன்ருட்டி முந்திரிப் பருப்புக்கு கிடைக்குமா தனிமரியாதை?

பன்ருட்டி பகுதியில் விளைவும் முந்திரிப் பருப்புக்கு புவிசார் குறியீடு கேட்டு தமிழக முந்திரி பதப்படுத்துவோர் மற்றும் ஏற்றுமதியாளர்கள்(டிஎன்சிபிஇஏ) கூட்டமைப்பு விண்ணப்பித்துள்ளது. 

GI tag sought for Panruti cashews
Author
cu, First Published Feb 21, 2022, 11:55 AM IST

பன்ருட்டி பகுதியில் விளைவும் முந்திரிப் பருப்புக்கு புவிசார் குறியீடு கேட்டு தமிழக முந்திரி பதப்படுத்துவோர் மற்றும் ஏற்றுமதியாளர்கள்(டிஎன்சிபிஇஏ) கூட்டமைப்பு விண்ணப்பித்துள்ளது. 

இதற்காக தமிழக முந்திரி பதப்படுத்துவோர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் செயலாளர் எம். ராமகிருஷ்ணா கூறுகையில் “ பன்ருட்டி பகுதியில்விளைவும் தரமான முந்திரிப் பருப்புக்கு புவிசார் குறியீடு கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளோம். 

ஏற்கெனவே பன்ருட்டி பழாப்பழம், முந்திரிப்  பருப்புக்கு புவிசார் குறியீடு கிடைக்க வேண்டும் என்பதில் தமிழக அரசும் ஆர்வமாக இருந்து நடவடிக்கை எடுத்து  வருகிறது. 

GI tag sought for Panruti cashews

பன்ருட்டி முந்திரிப்பருப்புகள் இயற்கையாகவே சுவையானவை, தரமானவை. பன்ருட்டி முந்திரிக்கு புவிசார் குறியீடு கிடைத்தால் இந்த தொழிலுக்கு ஊக்கம் வழங்குவது மட்டுமல்லாமல், இது சார்ந்த மற்ற தொழில் சார்ந்த நடவடிக்கைகளும் ஊக்கம்பெற்று வளரும். விவசாயிகள், முந்திரி ஏற்றுமதியாளர்கள்  நலன் பாதுகாக்கப்படும்” எனத் தெரிவித்தார்

பன்ருட்டி முந்திரிப் பருப்புகள் சிறியதாக இருக்கும், ஆனால், தனித்துவமான மதிப்பு சந்தையில் இருக்கிறது. 
கடலூர் பகுதியில் முந்திரிபயிரிடுவோர், எடுப்போரை தங்கச்சுரங்கம் வைத்திருப்போர் என்று அழைப்பதுண்டு. இந்தியா முழுவதிலும், உலகிலும் பன்ருட்டி முந்திரிக்கென தனி மதிப்பும், விலையும் உண்டு

தமிழகத்தில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் ஹெக்டேரில் முந்திரி விளைவிக்கப்படுகிறது, இதில் பன்ருட்டி பகுதியில் மட்டும் 35 ஆயிரம் ஹெக்டேரில் முந்திரி பயிர் செய்யப்டுகிறது.

GI tag sought for Panruti cashews

 இந்தப் பகுதியில் மொத்தம் 32 முந்திரி ஏற்றுமதி நிறுவனங்களும், 250 முந்திரி பதப்படுத்தும் நிறுவனங்களும், 500 குடிசைத்தொழில்களும் உள்ளன. கடலூர், பன்ருட்டி, விருதாச்சலம், குறிஞ்சிப்பாடி ஆகியப் பகுதிகளில் 376 கிராமங்களில் முந்திரி சாகுபடியும், பதப்படுத்தும் நிறுவனங்களும்செயல்பட்டு வருகின்றன. 

பன்ருட்டியில் முந்திரிப்பழங்கள் தனித்துவமானவை. வட்டவடிவில், வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஒரு பழம் சராசரியாக 42.50 கிராம் வரை இருக்கும். அதில் விளைவும் பருப்பு சராசரியாக 6.63 கிராம் வரை இருக்கும்.இந்தியாவில் 6வகையான முந்திரிப்பருப்புகள் முக்கியமானதாகக் கருதப்பட்டாலும், அதில் பன்ருட்டி முந்திரியில்தான் அதிகபட்சமாக 100 கிராமுக்கு 23 கிராம் புரோட்டீன் இருக்கிறது. பன்ருட்டியில் ஈரப்பதமும் மிகக்குறைவு என்பதால்கெட்டுப்போகாது

பன்ருட்டி முந்திரி பெரும்பாலும் கடற்கரை மணற்பகுதி, செம்மண், சரளை மண் ஆகியவற்றில்தான் அதிகமாக பயிர்  செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதற்கு முன் பல பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, திருநெல்வேலி அல்வா, பத்தமடைப் பாய், காஞ்சிபுரம் பட்டுப்புடவை, தூத்துக்குடி உப்பு, மக்ரூன்,கோவில்பட்டி கடலைமிட்டாய், பழனி பஞ்சாமிர்தம், மதுரை மல்லி, காரைக்குடி கண்டாங்கி சேலை, ஜிகர்தண்டா, சேலம் மாம்பழம், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை,ஓவியம்,கலைத்தட்டு, நெட்டிமாலை, கும்பகோணம் பாக்குசீவல், ஆம்பூர் பிரியாணி உள்ளிட்ட பலப்பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளன

Follow Us:
Download App:
  • android
  • ios