Asianet News TamilAsianet News Tamil

அதானி பக்கம் வீசிய அதிர்ஷ்டக் காற்று! சொத்து மதிப்பு மீண்டும் 100 பில்லியன் டாலரைத் தாண்டியது!

அதானி குழும அதிபர் கெளதம் அதானி 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்களைக் கொண்ட பணக்காரர்களின் எலைட் கிளப்பில் திரும்பவும் இடம்பிடித்துள்ளார். ஓராண்டுக்குப் பின் இந்தப் பட்டியலில் அவர் மீண்டும் இணைந்துள்ளார்.

Gautam Adanis fortune hits 100 billion again sgb
Author
First Published Feb 8, 2024, 10:37 AM IST

அதானி குழும அதிபர் கெளதம் அதானி 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்களைக் கொண்ட பணக்காரர்களின் எலைட் கிளப்பில் திரும்பவும் இடம்பிடித்துள்ளார். ஓராண்டுக்குப் பின் இந்தப் பட்டியலில் அவர் மீண்டும் இணைந்துள்ளார்.

2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட குறுகிய கால பின்னடைவுக்குப் பிறகு அதானி இழந்ததை திரும்ப மீட்டெடுத்துள்ளார். புதன்கிழமை, அதானியின் நிகர மதிப்பு 2.7 பில்லியன் டாலர் உயர்வு கண்டது. இதன் மூலம் அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 100.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

ஹிண்டர்பெர்க் அறிக்கையில் அதானி குழுமம் மீது கூறப்பட்ட பங்குசந்தை முறைகேடு குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் முற்றிலும் மறுத்தது.

ஒயிட் பேப்பர் என்றால் என்ன? மத்திய அரசு வெள்ளை அறிக்கையின் வரலாறும் பின்னணியும்

Gautam Adanis fortune hits 100 billion again sgb

அதானியின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் பங்குகள், கடந்த வாரம் 130% லாப அதிகரிப்பைக் காட்டின. தொடர்ந்து எட்டாவது நாளாக புதன்கிழமையும் பங்குகள் ஏறுமுகமாக இருந்தன.

ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதானி இப்போது உலகின் 12-வது பணக்காரராக இருக்கிறார். மற்றொரு இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானிக்கு அடுத்த இடத்தில் அதானியில் இருக்கிறார். இந்த மாதத் தொடக்கத்தில் அம்பானியின் சொத்து புதிய சாதனை உச்சத்தைத் தொட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், அதானியின் சொத்து மதிப்பு 2022ஆம் ஆண்டு எட்டிய உச்சத்தை விட 50 பில்லியன் டாலர்கள் குறைவாகவே உள்ளது. கடந்த ஆண்டு ஹிண்டன்பெர்க் அறிக்கை வெளியானதை அடுத்து அதானியின் சொத்து மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்தது. இழந்த சந்தை மதிப்பை மீண்டும் எட்டுவதற்கும், முதலீட்டாளர்களையும் கடன் வழங்குபவர்களையும் திரும்பப் பெறுவதற்கும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும் பல மாதங்கள் தேவைப்பட்டது.

ஒரே சார்ஜில் 110 கி.மீ. போகலாம்... விலையும் ரொம்ப கம்மி... கலக்கும் கைனடிக் லூனா!

Follow Us:
Download App:
  • android
  • ios