இலங்கையில் நிறுவனத்துடன் அதானி குழுமம் வர்த்தக ஒப்பந்தம்? ரணில், கவுதம் அதானி சந்திப்பு பின்னணி என்ன?
இந்தியா வருகை தந்திருக்கும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவை அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி சந்தித்துப் பேசினார்.
இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் பயணமாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று வருகை தந்துள்ளார். இன்றும் டெல்லியில் தங்கியிருக்கும் அதிபர் ரணில், பிரதமர் மோடி உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளை சந்தித்து பேச இருக்கிறார். இதற்கு முன்னதாக இலங்கை அதிபர் ரணிலை அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியை சந்தித்துப் பேசினார்.
இலங்கையில் அதானி குழுமத்தின் சார்பில் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு அதிபர் ரணிலை கவுதம் அதானி சந்தித்துப் பேசினார். கொழும்பு போர்ட் வேஸ்ட் கன்டெய்னர் டெர்மினலை மேம்படுத்துவது, 500 மெகாவாட் காற்றாலை திட்டம், பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி புதுப்பித்தல் நிபுணத்துவத்தை விரிவுபடுத்துவது உள்பட இலங்கையில் பல்வேறு தொழில்களை துவங்க பேச்சுவார்த்தை நடத்தியதாக கவுதம் அதானி டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை!!
பன்முகப்படுத்தப்பட்ட அதானி குழுமத்தின் முக்கிய துணை நிறுவனமான அதானி போர்ட்ஸ், மார்ச் 2021- ல் கொழும்பில் உள்ள வெஸ்ட் கன்டெய்னர் டெர்மினலை மேம்படுத்துவதற்கும், செயல்படுத்துவதற்கும் இலங்கை அதிகாரிகளிடமிருந்து ஒரு கடிதம் பெறப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. அதன் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
இலங்கையின் மிகப் பெரிய பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனமான ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி மற்றும் இலங்கை துறைமுக ஆணையத்துடன் அதானி போர்ட்ஸ் கூட்டு வர்த்தகத்தில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் வெஸ்ட் கன்டெய்னர் டெர்மினலின் கொள்கலன் கையாளும் திறனை அதிகரிக்கவும், உலகின் கப்பல் போக்குவரத்துக்கு முக்கிய தளமாக இலங்கை விளங்குவதால் கடல் வழி போக்குவரத்தை ஊக்குவிக்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
இன்டர்நெட் ஸ்பீட்.. உலக அளவில் முதலிடம் பிடித்த UAE - அங்க டவுன்லோட் ஸ்பீட் என்னென்னு தெரியுமா?
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டு இருந்த அறிக்கையில், "இந்தியாவின் அண்டை நாடுகளின் கொள்கை மற்றும் தொலைநோக்கு திட்டத்திற்கு சாகர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் , ஒரு முக்கிய பங்காளியாக இலங்கை உள்ளது. இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பை வலுப்படுத்தும் மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுஇருந்தது.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் இந்தியப் பயணம் முக்கியமானது, ஏனெனில் இலங்கையுடன் பன்முக உறவுகளை இந்தியா கொண்டுள்ளது என்று அரிந்தம் பக்சி வியாழக்கிழமை தெரிவித்து இருந்தார்.