இந்திய பங்குச் சந்தைகளில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPI) இந்த வாரம் ரூ. 10,000 கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ளனர்.

Investment in India:

இந்திய பங்குச் சந்தைகளில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPI) இந்த வாரம் ரூ. 10,000 கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ளனர். இதன் மூலம் இந்திய பங்குச் சந்தை மீது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்து முதலீடு செய்வது தெளிவாகிறது. 
தேசிய பத்திரங்கள் வைப்பு நிறுவனம் (NSDL) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஏப்ரல் 28 மற்றும் மே 2 க்கு இடையில் FPIகள் பங்குகளில் ரூ. 10,073 கோடியை முதலீடு செய்துள்ளன.

2025 ஆம் ஆண்டில் முதல் முறையாக ஏப்ரல் மாதத்தில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடு அதிகரித்து இருப்பதாக அந்த அறிக்கை காட்டுகிறது. ஏப்ரல் மாதத்தில் இந்திய பங்குகளில் FPIகளின் நிகர முதலீடுகள் ரூ. 4,223 கோடியாக இருந்தது. இது வெளிநாட்டு முதலீட்டுப் போக்குகளில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது. முந்தைய மாதங்களில் NSDL தரவு, மார்ச் மாதத்தில் FPIகள் ரூ. 3,973 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றதாக தெரிய வந்தது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், NSDL மற்றும் FPI முறையே ரூ. 78,027 கோடி மற்றும் ரூ. 34,574 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றனர்.

புதிய இந்திய பொருளாதார நம்பிக்கை:

இந்திய பங்குச் சந்தையில் இருந்து பல மாதங்கள் வெளியேறி வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தர்போத்சு இந்திய பங்குச் சந்தை மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்து வருகின்றனர். இது, இந்தியப் பொருளாதாரத்தில் புதிய நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. இருப்பினும், வலுவான வருகை இருந்தபோதிலும், வாரம் முழுவதும் ஒட்டுமொத்த சந்தை மனநிலை பலவீனமாகவே இருந்தது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட பதற்றம் முதலீட்டாளர்களின் மனநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, FPI முதலீடுகளின் நேர்மறையான தாக்கத்தைக் குறைத்தது.

வெள்ளிக்கிழமை உச்சம் தொட்ட இந்திய பங்குச் சந்தை:
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் ஆர்வம் காட்டினாலும், உள்நாட்டு நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் புவிசார் அரசியல் அபாயங்கள் சந்தைகளை அழுத்தத்தின் கீழ் வைத்திருக்கின்றன. பல முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள் மற்றும் நடந்து வரும் எல்லைப் பதட்டங்களுக்கு மத்தியில் அணுகுமுறையை கவனித்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் நேர்மறையான முடிவில், நிஃப்டி 24,300க்கு மேல் நிலையற்ற அமர்வில் முடிந்தது. நிறைவில், சென்செக்ஸ் 259.75 புள்ளிகள் அல்லது 0.32 சதவீதம் உயர்ந்து 80,501.99 ஆகவும், நிஃப்டி 12.50 புள்ளிகள் அல்லது 0.05 சதவீதம் உயர்ந்து 24,346.70 ஆகவும் முடிந்தது.

புவிசார் அரசியல் அபாயங்கள் இல்லாத நிலையில், ஒட்டுமொத்த நேர்மறையான உலகளாவிய மனநிலை உள்நாட்டு சந்தைகளில் நல்ல நகர்வை ஆதரித்திருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். வங்கி மற்றும் சந்தை நிபுணர் அஜய் பாக்கா ANI செய்தி நிறுவனத்துக்கு அளித்திருந்த பேட்டியில், "இந்திய சந்தைகள் இப்போது இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தில் சிகியுள்ளது. இல்லையெனில் இந்திய சந்தைகள் நல்ல உலகளாவிய பாசிடிவ் போக்கு மற்றும் நீடித்த உள்நாட்டு ஆதரவுடன் முன்னேறத் தயாராக உள்ளன" என்று கூறினார்.