அடப்பாவிகளா ..! நீங்க திருந்தவே மாட்டீங்களா ..?

மும்பை விமான நிலையத்தில், நடத்தப்பட்ட சோதனையில், கட்டுக்கட்டாக தங்க கட்டிகளும், வெளிநாட்டு பணமும் சிக்கியுள்ளது.

நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்:

நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், இன்று மும்பை விமான நிலையத்தில், நடத்திய சோதனையில் சுமார் 1 கிலோ தங்கம் மற்றும் 235 கிராம் தங்கக்கட்டி பறிமுதல் செய்யப்பட்டது.

மறைத்து வைத்த இடம் :

கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள், சிறிய வாக்கூம் க்ளீனரின் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக்கட்டி சோதனையில் சிக்கியது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பறிமுதலான தங்கத்தின் மதிப்பு ரூ.32 லட்சம் என மதிப்பிடபட்டுள்ளது.

தொடர்ந்து சோதனை நடத்திய போது, கட்டுக்கட்டாக வெளிநாட்டுப் பணமும் கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு 7,22,530 ரூபாய் என்பது குறிபிடத்தக்கது.

.