தேசியப் பங்குச்சந்தையின் ரகசிய தரவுகளை பகிர்ந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடத்தப்பட்டு விசாரணையில் கைது செய்யப்பட்ட, என்எஸ்இ முன்னாள்இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியத்தை மார்ச் 6ம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
தேசியப் பங்குச்சந்தையின் ரகசிய தரவுகளை பகிர்ந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடத்தப்பட்டு விசாரணையில் கைது செய்யப்பட்ட, என்எஸ்இ முன்னாள்இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியத்தை மார்ச் 6ம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
நியமனமுறைகேடு

தேசிய பங்கு சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக 2016ம் ஆண்டுவரை சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, தலைமை செயல் அதிகாரியின் ஆலோசகர் என்ற மிக முக்கிய பதவிக்கும், பின்னர் செயலாக்க அதிகாரியாகவும் ஆனந்த் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார். இவருக்கும் இந்தப்பதவிக்கும் சற்றும் தொடர்பில்லாதவர், அனுபவம் இல்லாதவர் என்று கூறப்பட்டது.
ஆனந்த் சுப்பிரமணியன் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன பணியில் சேர்வதற்கு முன் ஒரு நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.15லட்சம் வருமானத்தில்இருந்தார். ஆனால், சித்ரா ராமகிருஷ்ணா ஆலோசகராக பணியில் சேர்ந்தபின் ஆனந்த் சுப்பிரமணியத்துக்கு ஆண்டுக்கு 3 முறை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு, ரூ.2.31 கோடியாக அதிகரிக்கப்பட்டது என்றும் புகார்கள் வந்தன.
செபி விசாரணை
இது குறித்து பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்புான செபி விசாரணை நடத்தியதில் சித்ரா ராமகிருஷ்ணா, கடந்த 20 ஆண்டுகளாக இமயமலையில் உள்ள ஒரு சாமியாரின் ஆலோசனையின்படிதான் என்எஸ்இ அமைப்பை நடந்தியுள்ளதும் அவரின் அறிவுரைகள், கட்டளைப்படிதான் தேசியப் பங்குச்சந்தையையும் நடத்தியதும் தெரியவந்தது. ரிக்யஜுர்சமா@அவுட்லுக்.காம் என்ற மின்அஞ்சலில்தான் அந்த சாமியாருடன் சித்ரா ராமகிருஷ்ணா தொடர்பில்இருந்து, என்எஸ்இ தொடர்பான பல்வேறு ரகசிய விவரங்களைப் பகிர்ந்துள்ளார் எனத் தெரியவந்தது.
முதலில் அந்த சாமியாரைப் பார்த்ததுகூட இல்லை எனத் தெரிவித்த சித்ரா ராமகிருஷ்ணாவின் மின்அஞ்சல்களை செபி அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, இருவருக்கும் இடையே நெருங்கிய தொடர்புஇருந்ததும், ஷெசல்ஸ்தீவில் உல்லாக இருப்பதுவரையிலும் மின்அஞ்சலில் பகிர்ந்தது தெரியவந்தது.

அபராதம்
தேசியப் பங்குச்சந்தைக்கு ரூ.5 கோடிவரை இழப்பு ஏற்படுத்தியது, விதிமுறைகளைப் பின்பற்றாதது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை சித்ரா ராமகிருஷ்ணா செய்ததை செபி கண்டுபிடித்தது. இதையடுத்து, முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும், முன்னாள் செயல் அதிகாரி ரவி நரேன், ஆலோசகர் ஆனந்த் சுப்ரமணியன், ஆகியோருக்கு தலா ரூ.2 கோடியும் அபராதமாக செபி விதி்த்தது
சிபிஐ விசாரணை
இதற்கிடையே என்எஸ்இ தொடர்பான ரகசிய ஆவணங்களை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கு முன்பே, என்எஸ்இ சர்வர்களை வைத்திருக்கும் கோ-லொகேஷனில் இருந்து சில நிறுவனங்களுக்கு தகவல்களை அளித்து, அதன் மூலம் கோடிக்கணக்கில் ஆதாயத்தை சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன் பார்த்திருக்கலாம் என்று செபி குற்றம்சாட்டுகிறது. இது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டில் சில நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தி வந்தது.

மார்ச் 6 வரை காவல்
இதன் அடிப்படையில் சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோர் வீடுகளில் கடந்த வாரம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். சித்ரா ராமகிருஷ்ணா வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க சிபிஐ சார்பில் லுக்அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது.
இந்த கோ-லொகேஷன் விவகாரம் தொடர்பாக சிபிஐ ஆனந்த் சுப்பிரமணியத்திடம் விசாரணை நடத்தியநிலையில் நேற்று கைதுசெய்து டெல்லி அழைத்துச் சென்றனர். சிபிஐ நீதிமன்றத்தில் ஆனந்த் சுப்பிரமணியத்தை ஆஜர்படுத்திய நிலையில் அவரை மார்ச் 6ம் தேதிவரை காவலில்எடுத்து விசாரிக்கசிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
யார் இந்த சாமியார்
இந்நிலையில் சிபிஐ விசாரணைநடத்தியதில் சித்ரா ராமகிருஷ்ணாவுடன் தொடர்பில் இருந்த இமயமலைச்சாமியார் குறித்த விவரம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ சித்ரா ராமகிருஷ்ணனை 20 ஆண்டுகளாக ஆட்டிவைத்து, என்எஸ்இ அமைப்பை இயக்கிய இமயமலைச் சாமியார் வேறுயாருமில்லை, இந்த ஆனந்த் சுப்பிரமணியன்தான். சுப்பிரமணியன்தான் ரிக்யஜுர்சாம எனும் மின்அஞ்சலை உருவாக்கியுள்ளார். இந்த மின்னஞ்சலுக்குத்தான் என்எஸ்இ தகவல்களைப் rchitra@icloud.com. என்றமின்அஞ்சல் மூலம் சித்ரா பகிர்ந்துள்ளார்.

கோ-லொகேஷன் ஊழல் தொடர்பாக ஆனந்த் சுப்பிரிமணியத்திடம் விசாரித்தபோதுதான் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு அனுப்பிய மின்அஞ்சல்கள் குறித்தகவல்கள் கிடைத்தன. செபி அமைப்பு உத்தரவின்பெயரி்ல் நடத்தப்பட்ட கணக்குத்தணிக்கை ஆய்வில், இமயமலைச்சாமியார் ஆனந்த் சுப்பிரமணியன்தான் என்பது தெரியவந்தது.ஆனால், அதை செபி அமைப்பு மறுத்துவிட்டது. செபி அலுவலகத்தையும்சமீபத்தில் ஆய்வு செய்தோம். அதில் பல்வேறுமுக்கிய ஆவணங்கள், ஆதாரங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் கிடைத்துள்ளன. இந்த வழக்கில் அடுத்த கட்டத்துக்குச் செல்ல அது உதவும்” எனத் தெரிவித்தனர்
