Asianet News TamilAsianet News Tamil

இதை கவனிக்கலையே - டெஸ்லாவுக்கு டஃப் கொடுக்க ஃபோர்டு எடுக்கும் அதிரடி முடிவு..!

ஃபோர்டு நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் வியாபாரத்தை தனியாக பிரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Ford plans to separate EV business to increase valuation like Tesla Reports
Author
Tamil Nadu, First Published Feb 19, 2022, 12:42 PM IST

ஃபோர்டு மோட்டார் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் வியாபாரத்தை தனியாக பிரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதுபற்றிய அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என கூறப்படுகிறது. முழுமையான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களை போன்றே முதலீட்டாளர்களின் நன்மதிப்பை ஈட்ட ஃபோர்டு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

டெஸ்லா நிறுவனம் போன்று நிறுவன மதிப்பீடை அதிகரிக்க எலெக்ட்ரிக் வாகனங்கள் வியாபாரத்தை தனியாக பிரிக்க ஃபோர்டு மோட்டார் தலைமை செயல் அதிகாரி ஜிம் ஃபார்லி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது உலகின் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் என்ற பெருமையை ஃபோர்டு பெற்று இருக்கிறது. டெஸ்லாவின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலர்களை நெருங்கி வருகிறது. 

Ford plans to separate EV business to increase valuation like Tesla Reports

நிறுவனத்தை பிரிக்காமல், அதன் பிரவுகளில் மாற்றம் செய்து தனியே எலெக்ட்ரிக் வாகன யூனிட் ஒன்றை உருவாக்க ஃபோர்டு மோட்டார் திட்டமிட்டுள்ளது. "எலெக்ட்ரிக் மற்றும் கனெக்டெட் வாகனங்களுக்கான புதிய அத்தியாயத்தை எதிர்கொள்ள ஃபோர்டு பிளஸ் திட்டத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். எலெக்ட்ரிக் வாகன வியாபாரம் மற்றும் ICE வியாபாரத்தை பிரிப்பது பற்றி இதுவரை எந்த திட்டமும் இல்லை," என ஃபோர்டு மோட்டார் தெரிவித்து இருக்கிறது. 

"வெற்றிகரமான ICE வியாபாரத்தை நடத்துவது மற்றும் BEV வியாபாரத்தை நடத்துவது ஒன்றல்ல. வியாபாரங்களை அதன் தன்மைக்கு ஏற்ற நடத்துவதில் நிறுவனத்தின் குறிக்கோளை நினைத்து பெருமை கொள்கிறேன். எலெக்ட்ரிக் வாகன வியாபாரம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் வித்தியாசமானது. பாதியில் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள விரும்பவில்லை. அடிப்படை மாற்றத்திற்கான பணிகளை முடித்து விட்டோம். எங்களிடம் தெளிவான திட்டம் இருக்கிறது" என ஃபார்லி தெரிவித்தார். 

Ford plans to separate EV business to increase valuation like Tesla Reports

ஃபோர்டு நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் கவனம் செலுத்த 30 பில்லியன் டாலர்களை முதலீடு செய்து இருக்கிறது. 2030-க்குள் பிளக்-இன் கார்களை உற்பத்தி செய்யும் திறனுடன் ஆலைகளை மாற்ற மேலும் 20 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. 

வரவேற்பை எதிர்கொள்ள ஃபோர்டு நிறுவனம் தனது மஸ்டாங் மேக் இ மற்றும் எஃப் 150 லைட்னிங் பிக்கப் டிரக் உற்பத்தியை அதிகப்படுத்தி வருகிறது. ஃபோர்டு நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 6 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios