Gold Rate Today: தங்கம் விலை 4-வது நாளாகக் குறைந்து நகைப்பிரியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. 

தங்கம் விலை 4-வது நாளாகக் குறைந்து நகைப்பிரியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. 
தங்கம் விலை இன்று கிராமுக்கு 35 ரூபாயும், சவரனுக்கு 280 ரூபாயும் விலை வீழ்ந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,315ஆகவும், சவரன், ரூ.42,520ஆகவும் இருந்தது.

தங்கம் விலை தொடர் சரிவு! மிடில் கிளாஸ் மக்களுக்கு மகிழ்ச்சி! இன்றைய நிலவரம் என்ன

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வியாழக்கிழமை) கிராமுக்கு 35 ரூபாய் சரிந்து ரூ.5,280ஆகவும், சவரனுக்கு 280 ரூபாய் வீழ்ச்சி அடைந்து ரூ.42 ஆயிரத்து 240 எனச் குறைந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,280க்கு விற்கப்படுகிறது

தங்கத்தின் விலை தொடர்ந்து 4வது நாளாகக் குறைந்து நகைப்பிரியர்களுக்கும், நடுத்தர குடும்பத்தினருக்கும் ஆறுதலாக அமைந்துள்ளது. கடந்த 4 நாட்களில் சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. 
அமெரிக்காவின் ஜனவரி மாத சில்லறைப் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், அடுத்துவரும் கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை உயர்த்தும் என்பது உறுதியாகியுள்ளது.

இதனால், அந்நிய முதலீட்டாளர்கள் கடன் பத்திரங்களிலும் முதலீட்டை திருப்பியதால் தங்கத்தின் தேவை குறைந்து வருகிறது. இது தவிர, பண்டிகைக் காலமும் முடிந்துவிட்டதால், தங்கத்தின் தேவை குறைந்துள்ளதால் விலை குறைந்து வருகிறது.

தங்கம் விலை இன்றைய நிலவரம் என்ன? மிடில் கிளாஸ் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி!

 இதை நிலை தொடர்ந்து நீடித்தால், தங்கம் விலை ரூ.41ஆயிரத்துக்குள் வரும் என எதிர்பார்க்கலாம்.
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.72.00 ஆக இருந்தநிலையில் கிராமுக்கு 20 பைசா குறைந்து, ரூ.71.80 ஆகவும், கிலோ ரூ.72,000 ஆக இருந்தநிலையில், கிலோவுக்கு ரூ.200 சரிந்து, ரூ.71,800 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.