fitch ratings: 2022-23ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 10.30 சதவீதத்திலிருந்து, 8.50 சதவீதமாகக் குறைத்து ரேட்டிங் ஏஜென்சி பிட்ச் நிறுவனம் கணித்துள்ளது.
2022-23ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 10.30 சதவீதத்திலிருந்து, 8.50 சதவீதமாகக் குறைத்து ரேட்டிங் ஏஜென்சி பிட்ச் நிறுவனம் கணித்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் போரால் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என்று பிட்ச் கணித்துள்ளது.

ஒமைக்ரான் பரவல் குறைந்துவருவதால், கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன. இதனால் ஜூன் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்க சாத்தியங்கள் உள்ளன. இதனால் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி0.6 சதவீதம் அதிகரித்து 8.7சதவீதமாக அதிகரி்க்கும்.
ஆனால், அடுத்த நிதியாண்டில் அதாவது 2022-23ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.50 சதவீதமாகக் குறையும். முன்பு கணித்திருந்ததைவிட 1.8% சதவீதம் குறைத்துவிட்டோம். அதிகரித்துவரும் கச்சா எண்ணெய் விலை, பணவீக்கம் ஆகியவற்றால் பொருளாதார வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளது.

கொரோனா பாதிப்புக்குப்பின் பொருளாதார மீட்சி அடைந்துவரும்போது, சப்ளையில் ஏற்படும் சிக்கல், பணவீக்கம் உயர்வுஆகியவை வளர்ச்சியை பாதிக்கிறது. உக்ரைனில் நடக்கும் போர், ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள் ஆகியவை உலகளவில் கச்சா எண்ணெய் விலையை அதிகரிக்கும், சப்ளையில்தடைகளை உருவாக்கும். ரஷ்யா மீதான தடைகள் விரைவாக நீக்கப்பட வாய்ப்பில்லை.
கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவிலையில் ஏற்பட்ட உயர்வு, தொழில்துறையினருக்கு உள்ளீட்டுச் செலவை அதிகரிக்கும், நுகர்வோர்களின் வருமானத்தை பாதிக்கும். இதனால் உலகளவில் பொருளாதார வளர்ச்சி 0.7 சதவீதம் சரிந்து,3.5 சதவீதமாக இருக்கும்.
இவ்வாறு பிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது
