கணக்கில் வராத பணத்திற்கு 75 % வரி மற்றும் 10 சதவீதம் அபராதம் விதிக்கபட்டுள்ளது. இது குறித்து வருமான வரி சட்ட திருத்த மசோதாவை நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சற்று முன் மக்களவையில் தாக்கல் செய்தார்.....

 நவம்பர் 8 ஆம் தேதிக்கு பிறகு டெபாசிட் செய்த , கணக்கில் வராத பணத்திற்கு இந்த வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், வரி செலுத்த தவறினால், வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...

அதாவது,கருப்பு பணத்தை ஒழிக்கும் பொருட்டு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி, கடந்த எட்டாம் தேதி அதிரடியாக தெரிவித்தார்.

 இந்த அறிவிப்பை தொடர்ந்து, பல நெருக்கடிகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, தனிநபர் ஒருவர் தங்கள் வங்கி கணக்கில், இரண்டரை லட்சம் ரூபாய் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

இரண்டரை லட்சத்திற்கு மேல், வங்கி கணக்கில் பணம் இருந்தால், அதற்குண்டான வரி செலுத்த வேண்டும் என்றும், அதே வேளையில் கணக்கில் வராத பணத்திற்கு , அதிக பட்சமான வரி விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கபட்டு இருந்தது.

 இந்நிலையில், இன்று மக்களவையில் வரிவிதிப்பு குறித்து மசோதாவை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி .....