Asianet News TamilAsianet News Tamil

இடியாப்ப சிக்கலில் மத்திய பட்ஜெட்... விழி பிதுங்கி நிற்கும் நிர்மலா..!

அடுத்த ஆண்டுக்கான அரசாங்க நிதி ஒதுக்கீடுகளை இந்த பட்ஜெட் நிர்ணயிக்கும் என்பதை விட, பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசிற்கு  இருகின்றது. இந்திய குடியுரிமைச் சட்டம்,காஷ்மீர் விவகாரம்,பொருளாதார மந்தநிலை, விலைவாசி உயர்வு, வேலையின்மை, டெல்லி சட்டமன்றத்தேர்தல் என இடியாப்ப சிக்கல்களுக்கு இடையில் பட்ஜெட் உரை இருக்கும்.இதுவரைக்கும் இதுபோன்ற சூழ்நிலையில் மத்திய பட்ஜெட் தயாரிப்பு எந்த நிதியமைச்சருக்கும் அமைந்ததில்லை
 

Federal budget on idiopa problem ...!? Nirmala is going to fall ...
Author
India, First Published Jan 31, 2020, 8:46 PM IST

நாளை காலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாவது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். அடுத்த ஆண்டுக்கான அரசாங்க நிதி ஒதுக்கீடுகளை இந்த பட்ஜெட் நிர்ணயிக்கும் என்பதை விட, பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசிற்கு  இருகின்றது. இந்திய குடியுரிமைச் சட்டம்,காஷ்மீர் விவகாரம்,பொருளாதார மந்தநிலை, விலைவாசி உயர்வு, வேலையின்மை, டெல்லி சட்டமன்றத்தேர்தல் என இடியாப்ப சிக்கல்களுக்கு இடையில் பட்ஜெட் உரை இருக்கும்.இதுவரைக்கும் இதுபோன்ற சூழ்நிலையில் மத்திய பட்ஜெட் தயாரிப்பு எந்த நிதியமைச்சருக்கும் அமைந்ததில்லை.

Federal budget on idiopa problem ...!? Nirmala is going to fall ...

கடந்த ஆண்டு பட்ஜெட் உரையின்போது, ''அடுத்த சில ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நிலையை எட்டும் திறன் நமக்கு உள்ளது.'' என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்தின் மொத்த வருவாயைவிட, மொத்த செலவினம் அதிகரிப்பது நிதிப் பற்றாக்குறை எனப்படும். இதில் அரசு வாங்கும் கடன் அடங்காது. 2020 நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5%ஆக இருக்க இலக்கு வைக்கப்பட்டது. ஆனால் அந்த இலக்கை மத்திய அரசு எட்டவில்லை.

 இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை, பொருளாதாரத்தை உயர்த்த எந்த வகையில் உதவப்போகிறது என்று தெரியவில்லை. கடந்த ஆண்டு பட்ஜெட் பரவலாக பேசப்படவில்லை என்றாலும், சாமானியர்களுக்கு சில சலுகைகளை வழங்கியது.

Federal budget on idiopa problem ...!? Nirmala is going to fall ...

 மின்சாரமும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எரிவாயுவும் அனைத்து கிராமப்புற இல்லங்களுக்கும் 2022ம் ஆண்டிற்குள் கொண்டு சேர்க்கப்படும் என உறுதியளித்தார். கிராமப்புற போக்குவரத்து திட்டங்களும் வீடுகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்தும் கடந்த பட்ஜெட்டில் 1999-20 அவர் அறிவித்திருந்தார்.

''இந்த திட்டம் அறிவித்தபோது மக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டினார்கள், ஆனால் தற்போதைய தரவுகளை வைத்து பார்க்கும்போது சிலிண்டரை மறுமுறை நிரப்பி பயன்படுத்துவதில் மக்கள் ஈடுபாடு காட்டவில்லை, இன்றும் நாட்டின் பல பகுதிகளில் மக்கள் விறகு அடுப்புகளை பயன்படுத்துகின்றனர்'' என மூத்த பொருளாதார நிபுணர் கவிதா கூறுகிறார்.

கிராமப்புறங்களுக்கு மின்சார உற்பத்தியை கொண்டு சேர்க்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது, ஆனால் விநியோக நிறுவனங்களின் செயல்பாட்டால் மின்சார உற்பத்தியில் சிக்கல் ஏற்படுகிறது. இந்தியாவின் விநியோக நிறுவனங்கள் 80,000 கோடி கடனில் உள்ளது, எனவே தேவைக்கேற்ப மின்சாரம் வழங்க முடியவில்லை. 

2022ம் ஆண்டிற்குள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு அமைக்க வேண்டும் என அரசாங்கம் இலக்கு வைத்தது. 2021-22 நிதி ஆண்டிற்குள் 19,500,000 வீடுகள் கட்டிமுடிக்கப்படும் என நிதிநிலை அறிக்கையின்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 உத்தரபிரதேசம், குஜராத் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் வெற்றிகரமாக 2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் கிட்டத்தட்ட 11.22 லட்சம் வீடுகளை கட்டிமுடித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே நேரத்தில் அங்கு 3.62 லட்சம் வீடுகள் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.சரியான நேரத்தில் கட்டுமான திட்டத்தை முடிப்பது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது, 

இந்திய பொருளாதார மந்தநிலை இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ளது 
உண்மையில் பொருளாதார மந்தநிலையால் ரியல் எஸ்டேட் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி விதிபால் ரியல் எஸ்டேட் தொழில் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பை சேரி செய்ய அரசு 25,000 கோடி ஊக்க தொகையை, நவம்பர் 2019ல் அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பால் எந்த முன்னேற்றமும் இல்லை என்று வர்த்தக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

Federal budget on idiopa problem ...!? Nirmala is going to fall ...
 
 மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு வந்த 61,084 கோடி ரூபாயும் 60,000 கோடியாக குறைக்கப்பட்டது. முத்ரா, ஸ்டாண்ட் அப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா உள்ளிட்ட சுயதொழில் திட்டங்களுக்கு 515 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது.
வேலை வாய்ப்பின்மை இந்திய அரசாங்கத்திற்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும் என்று நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

 "இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை  7.5 சதவீதமாக உள்ளது, எனவே 20 வயதான நான்கில் ஒரு பட்டதாரிக்கு வேலை கிடைப்பதில்லை'' என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

ஆண்டு வருமானம் 1.5 கோடிக்கு கீழ் உள்ள சிறு தொழில் வர்த்தகர்கள் மற்றும் கடை வைத்து வர்த்தகம் மேற்கொள்ளும் கடையின் உரிமையாளர்களுக்கு பிரதான் மந்திரி கரம் யோகி மான் தான் திட்டத்தின் கீழ் ஓய்வு ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பிரதான் மந்திரி கரம் யோகி மான் தான் திட்டம் மிக பெரிய தோல்வி அடைந்துள்ளது.

இந்தியாவில் உள்ள 7 கோடி வர்த்தகர்களில் வெறும் 25,000 வர்த்தகர்கள் மட்டுமே இந்த திட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த திட்டம் குறித்த கருத்துகளையும் அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு அரசாங்கத்திடம் பதிவு செய்துள்ளது.

2020-21 பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு குறித்து தென்னிந்திய ஜவுளி ஆலைகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான கே.செல்வராஜ் பேசுகையில், “நடப்பு நிதியாண்டில் குறைந்த அளவில் நிதி ஒதுக்கப்பட்டதோடு, ஒதுக்கப்பட்ட நிதியும் பயனாளர்களுக்கு சரியாக வந்துசேரவில்லை. இந்த பட்ஜெட்டில் ஜவுளித் துறையினருக்குப் போதிய அளவில் நிதி ஒதுக்கப்பட வேண்டும். அதோடு, ஒதுக்கீடு செய்யப்படும் நிதியைப் பெறுவதற்கான ஒப்புதலில் தாமதம் உள்ளிட்ட சிக்கல்களுக்கும் தீர்வுகாண வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்

T Balamurukan


 

Follow Us:
Download App:
  • android
  • ios