நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் வரையிலாக , குறுகிய கால பயிர் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதன் மூலம், மத்திய அமைச்சரவை ரூ. 660.50 கோடி மதிப்பிலான கடன் மீதான வட்டியை தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மைச்சரவை கூட்டம்:

இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், குறுகிய கால பயிர் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வது குறித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.மேலும், மாசுக்காற்றை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள், ஐஐஎம் சட்ட திருத்த மசோதா உள்பட பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக வும் தகவல் வெளியாகி உள்ளது.

என்ன மாற்றம் ?

ஐஐஎம் சட்ட திருத்த மசோதாவில், டிப்ளமோ சான்றிதழுக்கு பதில், டிகிரி சான்றிதழ் வழங்குவது என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.di

உலக தரத்தில் மாநாடு:

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உலக தரத்தில் மாநாட்டு மையம் அமைப்பது என்றும் முடிவு செய்யபட்டுள்ளது. இதற்காக ரூ.2,254 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன