கவலை படாதீங்க .......!!! விவசாயிகளுக்கு சூப்பர் சலுகை அறிவிச்சாச்சி மத்திய அரசு ....!
விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னை குறித்து, இன்று ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, விவசாயிகள் வங்கிகளிடம் இருந்து பெற்ற , பயிர்க்கடனில் இருந்து விவசாயிகள் வாரம் ரூ.25,000 எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் சில கருத்துக்களை முன்வைத்தார்.
கூலி தொழிலாளர்கள் நலன் கருதி,அவர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்கும் பொருட்டு, வேளாண் விளைபொருள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், அதாவது, (ஏபிஎம்சி) இல் , பதிவு செய்துள்ள வர்த்தகர்கள் வாரத்துக்கு ரூ.50,000 பணம் வங்கியில் இருந்து எடுக்க அனுமதிக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், இதில் பதிவு செய்துள்ள விவசாயிகள் , தங்கள் விளை பொருள்களை வாங்குவதற்காக செலுத்தும் தொகையிலிருந்து வாரத்துக்கு ரூ.25,000 வங்கியில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
உண்மையில், விவசாயிகளுக்கு கிடைத்த இந்த சலுகையை வரவேற்கலாம் .......!!!
