ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு மேல் பிஃஎப் பங்களிப்பு செய்பவர்களுக்கான புதிய வரியை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில் அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை இபிஃஎப் அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு மேல் பிஃஎப் பங்களிப்பு செய்பவர்களுக்கான புதிய வரியை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில் அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை இபிஃஎப் அமைப்பு வெளியிட்டுள்ளது.

ரூ.2.50 லட்சம்

2021ம் ஆண்டு பட்ஜெட்டுக்கு முன்புவரை பிஃஎப் கணக்கிலிருந்து பணம் எடுத்தால் அதற்கு முழுமையான வரிவிலக்கு இருந்தது. ஆனால், 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது, மத்திய நிர்மலா சீதாராமன் பேசுகையில் “ ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் இபிஃஎப் கணக்கில் பங்களிப்பு செய்பவர்களுக்கு வரிவிதிக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம்தேதி வெளியிட்ட அறிவிக்கையின்படி, ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கும் அதிகமாக பிஃஎப் கணக்கில் பங்களிப்பு செய்பவர்களுக்கு வரிவிதிக்கப்படும். நிறுவனங்கள் பங்களிப்பு செய்யாத பிஃஎப் கணக்கிற்குஇந்த வரம்பு ரூ.5 லட்சமாக இருக்கும்.

தனித்தனி கணக்கு

இதன்படி பிஃஎப் கணக்கு இருபிரிவுகளாகப் பிரிக்கப்படும். 2021-22ம் ஆண்டுக்கு தனிக் கணக்கும், அடுத்துவரும்ஆண்டுக்கு தனிக் கணக்கு உருவாக்கப்படும். ஆனால், ஆண்டுக்கு ரூ.2.50லட்சத்துக்கும் குறைவா பங்களிப்பு செய்பவர்களுக்கு ஒரே கணக்கு மட்டும்தான் பராமரிக்கப்படும்.
இந்நிலையில் ஆண்டுக்கு ரூ2.50 லட்சத்துக்கும் அதிகமாக பிஃஎப் கணக்கில் பங்களிப்பு செய்பவர்களுக்கு விதிக்கப்படும் வரி குறித்து இபிஃஎப் அமைப்பு வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்துள்ளது.

வரிவிதிப்பு

இதன்படி, ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் பிஎப் கணக்கில் பங்களிப்பு செய்பவர்கள், தங்களின் ஆதார் எண்ணை, பிஎப் கணக்குடன் இணைக்காமல் இருந்தால், இதற்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும்.ரூ.2.50 லட்சத்துக்கும் அதிகமாக பங்களிப்பு செய்பவர்கள், தங்களின் பிஎப் கணக்குடன் பான் எண்ணை இணைத்திருந்தால், அவர்களுக்கு 10 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படும்.

டிடிஎஸ்

டிடிஎஸ் கணக்கிடும்போது, பிஃஎப் கணக்கில் வரும் வட்டி ரூ.5 ஆயிரம் வரை இருந்தால், அதற்கு டிடிஎஸ் பிடிக்கப்படாது. 
இந்தியாவில் செயலில் உள்ள பிஎஃப் கணக்குகளை வைத்திருக்கும் வெளிநாட்டினர் அல்லது குடியுரிமை பெறாத ஊழியர்களுக்கு, 30% வீதம் வரிபிடித்தம் செய்யப்படும். எந்த நாட்டில் அந்த ஊழியர் வசிக்கிறாரோ அந்தந்த நாடுகளால் இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின் (DTAA) விதிகளின்படி வரி பிடித்தம் செய்யப்படும்.

இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின்படி பிஃஎப் கணக்கு வைத்திருப்போர் ஏதாவது சலுகையை அனுபவித்தார், அது குறித்து வருமானவரிச் சட்டம் 1961, பிரிவு 90ன்கீழ் தெரிவிக்க வேண்டும். வட்டிவருவாய் ரூ.50 லட்சத்துக்கும் அதிகரித்தால், கூடுதலாக 4 சதவீதம் செஸ் டிடிஎஸ் தொகையில் விதிக்கப்படும்.

இவ்வாறுஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது