epfo : தொழிலாளர்களின் இபிஃஎப் கணக்கில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய விதி அமலுக்கு வருகிறது.  

தொழிலாளர்களின் இபிஃஎப் கணக்கில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய விதி அமலுக்கு வருகிறது. 

.மாத ஊதியம் பெறும் தொழிலாளர்கள் ஊதியத்திலிருந்து குறைந்த அளவு பிடிக்கப்பட்டு, அது பிஃஎப் கணக்கில் சேமிக்கப்பட்டு வருகிறது. இந்த பணத்தை ஓய்வு காலத்துக்கு பின்போ அல்லது ஓய்வு காலத்துக்கு முன்போ எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஓய்வு காலத்துக்கு முன் ஒருவர் தனது பிஃஎப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க சில விதிகள், வழிகாட்டல்கள் உள்ளன.

ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம்

2021ம் ஆண்டு பட்ஜெட்டுக்கு முன்புவரை பிஃஎப் கணக்கிலிருந்து பணம் எடுத்தால் அதற்கு முழுமையான வரிவிலக்கு இருந்தது. ஆனால், 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது, மத்திய நிர்மலா சீதாராமன் பேசுகையில் “ ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் இபிஃஎப் கணக்கில் பங்களிப்பு செய்பவர்களுக்கு வரிவிதிக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்

இந்த அறிவிப்பையடுத்து, மத்திய நேரடி வரிகள் வாரியம், ஆண்டுக்கு ரூ.2.50லட்சத்துக்கு மேல் பிஃஎப் கணக்கில் பங்களிப்பு செய்பவர்களுக்கு எவ்வாறு வரிவிதிக்கலாம் என்பது குறித்து விதிகளை வகுத்துள்ளது

ரூ.5 லட்சம்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம்தேதி வெளியிட்ட அறிவிக்கையின்படி, ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கும் அதிகமாக பிஃஎப் கணக்கில் பங்களிப்பு செய்பவர்களுக்கு வரிவிதிக்கப்படும். நிறுவனங்கள் பங்களிப்பு செய்யாத பிஃஎப் கணக்கிற்குஇந்த வரம்பு ரூ.5 லட்சமாக இருக்கும்.

2 பிரிவுகள் 

இதன்படி பிஃஎப் கணக்கு இருபிரிவுகளாகப் பிரிக்கப்படும். 2021-22ம் ஆண்டுக்கு தனிக் கணக்கும், அடுத்துவரும்ஆண்டுக்கு தனிக் கணக்கு உருவாக்கப்படும். ஆனால், ஆண்டுக்கு ரூ.2.50லட்சத்துக்கும் குறைவா பங்களிப்பு செய்பவர்களுக்கு ஒரே கணக்கு மட்டும்தான் பராமரிக்கப்படும்.

ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு மேல் பங்களிப்பு செய்யும் கணக்குகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். இதில் கிடைக்கும் வட்டித் தொகைக்கு தனியாக வரிவிதிக்கப்படும். வரி விதிப்புக்கு உட்படாத பிஃஎப் கணக்கு 2021 மார்ச் மாதம் வரையிலான விவரங்களைக் கொண்டிருக்கும். வரி விதிப்புக்கு உட்பட்டது நடப்பு நிதி ஆண்டின் (2021 ஏப்ரல் - 2022 மார்ச்) பிஎஃப் விவரங்களையும் உள்ளடக்கி இருக்கும். அதன் அடிப்படையில் வட்டிக்கான வரி கணக்கிடப்படும்.