employment news : இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டிலிருந்து 7 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு 22 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.
இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டிலிருந்து 7 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு 22 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பதில் அளித்துப் பேசியதாவது:
வேலைவாய்ப்பு அதிகரிப்பு
கடந்த 2013-14ம் ஆண்டில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 7 ஆண்டுகளில் நாட்டில் வேலைவாய்ப்பு 22 சதவீதம் அதிகரித்துள்ளது. தொழிலாளர் ஆய்வு அறிக்கையான பிஎல்எப்எஸ் கூற்றுப்படி, 15 வயது முதல் 40வயதுள்ள படித்து வேலையில்லாமல் இருப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இ்ந்த அறிக்கையின்படி நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், மருத்துவத்துறை, கல்வி ஆகியவற்றில் ஏராளமான வேலைவாய்புகள் பல்வேறு அரசு நலத்திட்டங்கள்மூலம் உருவாக்கப்பட்டுள்ளன

22 சதவீதம்
2014ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்த 7ஆண்டுகளில் 22 சதவீதம் வேலைவாய்ப்பு அதிகரி்த்துள்ளது. வேளாண் துறையைத் தவிர்த்து, போக்குவரத்து, கல்வி, சுற்றுலா, வர்த்தகம், ஐடி துறை ஆகியவற்றில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
27 கோடி பேர்
மத்திய அரசின் e-SHRAM போர்டலில் கடந்த 6 மாதங்களில் 27 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களைப் பதிவு செய்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த போர்டல் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம், அமைப்புசாரா தொழிலாளர்கள் பட்டியலிட வேண்டும், சமூக பாதுகாப்பு கிடைக்க வேண்டும், மத்திய அரசு, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் பெற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது.

இலவச காப்பீடு
அமைப்புசாரா துறையில் உள்ள 16 வயதுமுதல் 59 வயதுள்ள அனைவரும் இதில் பதிவு செய்யலாம். அனைவருக்கும் இலவசமாக ரூ.2 லட்சம் வரை பிரதமர் சுரக்ஸா பீமா திட்டத்தின் கீழ் விபத்துக்காப்பீடு கிடைக்கும். இன்னும் பல்வேறு பலன்கள் கிடைக்கும்
இவ்வாறு பூபேந்திர யாதவ் தெரிவித்தார்
