Asianet News TamilAsianet News Tamil

உலக பணக்காரர்கள் பட்டியலில் திடீரென 2ம் இடத்துக்கு பின்னுக்கு தள்ளப்பட்ட எலான் மஸ்க் - என்ன காரணம்?

உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்த எலான் மஸ்க், தற்போது இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

Elon Musk was dethroned as the worlds richest person Here who is No1 now
Author
First Published Dec 14, 2022, 10:33 PM IST

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் தி போரிங் கம்பெனியின் நிறுவனர், நியூரா லிங்க் நிறுவனத்தின் இணை நிறுவனர், ட்விட்டர் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என பல்வேறு பொறுப்புகளை கவனித்து வருகிறார் எலான் மஸ்க்.

Elon Musk was dethroned as the worlds richest person Here who is No1 now

 உலகில் மிகவும் புகழ்பெற்றவருமான எலான் மஸ்க், சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கி, ட்விட்டரில் தொடர்ந்து  மாறுதல்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2020 ஆண்டு முதல் 2022 வரையில் அவரது சொத்து மதிப்பு எழுச்சி பெற்றது.

இதையும் படிங்க..ஜனவரி 4ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு !

இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை, டெஸ்லா பங்குகள் 4 சதவீதம் வீழ்ச்சியை கண்டது. அதனால் இப்போது இரண்டாவது இடத்தில் 164 பில்லியன் டாலர்களுடன் மஸ்க் பின்தங்கி உள்ளார். முதலிடத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் 171 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் முதலிடத்துக்கு முந்தி உள்ளார்.

Elon Musk was dethroned as the worlds richest person Here who is No1 now

ப்ளூம்பெர்க் நிறுவன உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. பெர்னார்ட் அர்னால்ட்டுக்கு 73 வயது ஆகிறது. இவர் எல்விஎம்ஹெச் நிறுவத்தின் தலைவராக இயங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..பாவம் சும்மா விடாது.!! முதல்வர் மு.க ஸ்டாலின் சாதனை இதுதான்.!! கொந்தளித்த எஸ்.பி வேலுமணி

Follow Us:
Download App:
  • android
  • ios