E-scooters fire: இ-ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து தீவிபத்து நடக்கும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் அதற்குரிய காரணம் என்ன என்று பலருக்கும் தெரிவதில்லை. அதுகுறித்து இந்தசெய்தி தொகுப்பு விளக்குகிறது.
இ-ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து தீவிபத்து நடக்கும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் அதற்குரிய காரணம் என்ன என்று பலருக்கும் தெரிவதில்லை. அதுகுறித்து இந்தசெய்தி தொகுப்பு விளக்குகிறது.
தொடரும் விபத்துகள்
சமீபத்தில் ஓலா நிறுவனத்தின் எஸ்1ப்ரோ வகை இ-ஸ்கூட்டர் சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்தநிலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதைத் தொடர்ந்து சென்னையில் பியூர் இவி நிறுவனத்தின் இ-ப்ளூட்டோ ரக மாடல் இ-ஸ்கூட்டர் தீ பிடித்துஎரிந்தது.

இதற்கிடையே வேலூர்மாவட்டம், அல்லாபுரத்தில் இ்ஸ்கூட்டரில் உள்ள பேட்டரிக்கு இரவு சார்ஜ்போட்டுதூங்கியபோது பேட்டரி வெடித்து தீப்பிடித்தது தந்தை, மகள்உயிரிழந்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவருகிறது எனக் கருதி மக்கள் இஸ்கூட்டருக்கு மாறிவரும் நிலையில் இப்படிஅடிக்கடி தீப்பிடித்து எரியும் சம்பவம் முதலுக்கே மோசம் வந்துவிடுமோ என்ற அச்சத்தை மக்களுக்கு ஏற்படுத்துகிறது.
காரணம் என்ன
பெட்ரோல் விலை ஏறினாலும் பரவாயில்லை, நான் பைக்கே வாங்கிக்கிறேன் என்று மக்கள் இந்த சம்பவங்களைப் பார்த்தபின் மக்கள் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் ஏன் இந்த இ-ஸ்கூட்டர்கள் தீப்பிடிக்கின்றன, அதிலும் லித்தியம் பேட்டரிகள் தீப்பிடிக்கின்றன என்பதை தெரிந்துகொண்டு, தடுக்கும் வழிகளைக் கடைபிடித்தால் தீ விபத்துகளைத் தவிர்க்கலாம்.
லித்தியம் பேட்டரி பயன்பாடு ஏன்
லித்தியம் பேட்டரியில் மட்டுமே, லீட்-ஆசிட் பேட்டரியைவிட அதிகமான மின்சக்தியை சேமிக்க முடியும் என்பதால் லித்தியம் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. ஏறக்குறைய லீட் ஆசிட் பேட்டரி ஒருகிலோவுக்கு 25வாட்ஸ் சக்தியை சேமிக்க முடியும் என்றால் லித்தியம் ஹைட்ரிட் பேட்டரி ஒரு கிலோவுக்கு 100வாட்ஸையும், லித்தியம் அயன் பேட்டரி 150வாட்ஸையும் சேமிக்க முடியும். அதனால்தான் இ-ஸ்கூட்டர்களுக்கு லித்தியம் அயன்பேட்டரி பயன்படுத்தப்படுகிறது

இஸ்கூட்டரில் மட்டுமல்ல அன்றாடவாழ்விலயே லித்தியம்அயன் பேட்டரி பயன்பாட்டை தவிர்க்க முடியாது. செல்போன் அதிகநேரம் சார்ஜ் நீடித்து இருக்க லித்தியம் பேட்டரிகள்தான் பயன்படுகின்றன.அதனால்தான் அதிகநேரம் சார்ஜ்போடும்போது சூடாகி பேட்டரிகள் வெடிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன
இந்த லித்தியம் அயன் பேட்டரிகளை எத்தனை முறை சார்ஜ் செய்தாலும் அதன் செயல்திறன் பெரும்பாலும் குறையாது. பாதுகாப்பானது என்பதால்தான் பெரும்பாலும் லித்தியம் அயன் பேட்டரியை விரும்புகிறார்கள். ஆனால், சமீபத்தில் இ-ஸ்கூட்டரில் நடந்த சம்பவம் லித்தியம் அயன் பேட்டரி பாதுகாப்பில் கேள்வி எழுப்பியுள்ளது.
உருவாக்கம் எப்படி
லித்தியம் அயன் பேட்டரிகள் பல செல்களை உள்ளடக்கியது, அந்த செல்கிளில் லித்தியம் இருக்கும். ஒவ்வொரு பேட்டரியிலும் ஒருமுனையில் எலெக்ட்ரோடும் மற்றொரு முனையில் கேதோடும் இருக்கும். அனோடு, கேத்தோடில் லித்தியம் கொண்டிருக்கும் ஆனால், வேறுபொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். முன்பு கார்பனையும், தற்போது லித்தியம் கோபால்ட் ஆக்டால் உருவாக்கப்படுகிறது
லித்தியம் பேட்டரிக்கு சார்ஜ் செய்யும்போது, மின்சாரம் செல்களுக்குள்சென்று லித்தியம் அயன் கேதோடிலிருந்து அனோடுக்கு நடுவில் இருக்கும் எலெக்ரோலைட் மூலம் செல்லும். சக்தி மின்ஆற்றலாகச் செல்லும்போது, லித்தியம் அயன் அனோடிலிருந்து கேதோடுக்கு செல்லும்.அனைத்து லித்தியம் பேட்டரிகளும் சார்ஜ் தீரும்போது,அதாவது பயன்பாட்டில் இருக்கும் போது செல்கள் கேதோடு நோக்கி நகரும்

பராமரிப்பு
மற்ற பேட்டரிகளைப் போல் அல்லாமல் லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு விரிவான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. பேட்டரி வெப்பநிலையை பராமரிப்பதுதான் பேட்டரியை பராமரிப்பதில் முக்கியமானது. செல் வெப்பநிலை மற்றும் சார்ஜ் செய்யும்போது மின்சாரம், வோல்டேஜையும் பராமரிப்பது அவசியம்
அனைத்து லித்தியம் பேட்டரிகளிலும் ஒரு பகுப்பான் இருக்கிறது. அதாவது பேட்டரியில் வெப்பம் அதிகமாகும்போது, அயன்போக்குவரத்து நிறுத்துவதற்காக அது உருகிவிடும்.
2-வது முக்கியமான அம்சம் லித்தியம் அயன் பேட்டரிக்கு காற்றோட்டமான சூழல் இருப்பது அவசியம். அவ்வாறு இருக்கும்போது மற்ற செல்கள் தீப்பிடிப்பதைத் தடுக்கும். பேட்டரி பேக்அப் நன்றாக இருக்க பேட்டரியை மேலாண்மை நன்றாக இருப்பது அவசியம். அப்போதுதான் பேட்டரியை அதிகமாக சார்ஜ் ஆகவிடாமல்,சார்ஜ் இறங்கவிடாமல் பாதுகாக்கும். வெப்பத்தை பராமரித்தல், லூஸ் கலென்ஷென் இருந்தால் சரிசெய்தல், அடிக்கடி பரிசோதித்தல் அவசியம்

ஏன் தீப்பிடிக்கின்றன
லித்தியம் அயன்பேட்டரிகள் தயாரிப்பில் குறைபாடு இருக்கலாம், வெளிப்புறத்தில் சேதம், பேட்டரி செயல்திறன் குறைவு, சாஃப்ட்வேரில் குறைபாடு ஆகியவை தீவிபத்து ஏற்படக் காரணமாகக் கூறப்படுகிறது.
பேட்டரியில் கெட்டுப்போன செல் மீது அதிகமான மின்சாரம், வெப்பம் கடத்தப்படும்போது, அது தெர்மல் ரன்வேவுக்கு கொண்டு செல்லும். இதனால் கெட்டுப்போன செல் தனது வெப்பத்தை அடுத்த செல்லுக்கு கடத்தும், இது சங்கிலித் தொடர்போன்று நடந்து பேட்டரி தீப்பிடிக்க காரணாமாகிறது.
பேட்டரி தயாரிப்பில் மோசமான ஒரு செல் வைக்கப்பட்டிருந்தாலும், இந்த விபத்து நடக்கும். பேட்டரிமேலாண்மை பாதுகாப்பில் சமரசம் செய்து, அளவான பேட்டரியை தாயாரிக்க முற்படும்போது தொழில்நுட்ப குறைபாடுகளால் விபத்து ஏற்படலாம்.
லித்தியம் என்பது எதிர்வினையாற்றும், தீப்பிடிக்கக்கூடிய பொருள். தற்போது, லித்தியம் அயன் பேட்டரிகள் என்பது, திரவவடிவ எலெக்ட்ரோலைட்ஸுக்கு சார்ஜ் ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இதுபோன்ற தீவிபத்துகளைத் தடுக்க தெர்மல் ரன்வேயைத் தடுக்க கிராபெனில் தயாரிக்கப்பட்ட எலெக்ட்ரோட் பயன்படுத்தப்படுகிறது. கிராபென் பேட்டரிகள் அதிகமாக சூடாவதைத் தடுக்கும் பொருளாகும்.

தடுக்கும் வழிமுறை என்ன
நுகர்வோர் பார்வையில், லித்தியம்அயன் பேட்டரிகள் நம்பகத்தன்மையான தொழில்நுட்பம், பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. பேட்டரி தயாரிப்பில் குறை ஏற்பட்டால் மட்டுமே பெரும்பாலும் சிக்கல் ஏற்படும். ஆதலால் லித்தியம் பேட்டரிகளை அதிகமான சார்ஜ்செய்யாமல் இருத்தல், சூரிய வெளிச்சம் நேரடியாக பேட்டரியில் படுமாறு இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பேட்டரியை கழற்றி பொருத்துமாறு இருந்தால், இரவுநேரத்தில் சார்ஜ் போடுவதை தவிர்க்கவேண்டும்.

பேட்டரியின் வெளிப்பகுதியில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என அடிக்கடை பரிசோதிக்க வேண்டும். ஏதாவது ரசாயன லீக்கேஜ் ஏற்படும்போதுதான் தெரமல் ரன்அவே ஏற்படும், தொடர் கண்காணிப்பில் மூலம் தடுக்க முடியும். எப்போதுமே பேட்டரின் சார்ஜ் 10 சதவீதத்துக்கும் குறையாமல் பார்க்க வேண்டும், 10 சதவீதத்துக்கு மேல்இருக்கும்போதே சார்ஜ் செய்ய வேண்டும். வேகமாக சார்ஜ் செய்வது என்பது பேட்டரியின் திறனை காலப்போக்கில் குறைத்துவிடும்.
