Asianet News TamilAsianet News Tamil

usd to inr:இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக ரூ.82 ஆக வீழ்ச்சி அடையும்: பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு

இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக ரூ.82 ஆக வரும் மாதங்களில் வீழ்ச்சி அடையும் என்று பல்வேறு பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் கணித்துள்ளன.

Due to hawkish central banks, the rupee may decline to 82 against the US dollar.
Author
New Delhi, First Published Jul 26, 2022, 5:51 PM IST


இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக ரூ.82 ஆக வரும் மாதங்களில் வீழ்ச்சி அடையும் என்று பல்வேறு பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் கணித்துள்ளன.

இந்தியாவின் அதிகரித்துவரும் வர்த்தகப்பற்றாக்குறை, அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை உயர்த்துதல் ஆகியவற்றால், ரூபாய் மதிப்பு மேலும் சரியும்.

Due to hawkish central banks, the rupee may decline to 82 against the US dollar.

அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் அதைக் கட்டுப்படுத்தும்வகையில், வட்டிவீத்தை 75 புள்ளிகள் வரை பெடரல் வங்கி உயர்த்தும் என்று எதிர்பார்கப்படுகிறது. பெடரல் வங்கி 26 மற்றும் 27 தேதிகளில் கூடி ஆலோசிக்கிறது.

5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று தொடக்கம்: அதானி, ரிலையன்ஸ் உள்பட 4 நிறுவனங்கள் பங்கேற்பு

ஏற்கெனவே இந்திய ரூபாய் மதிப்பு ரூ.80க்கு கீழ் சரி்ந்துள்ளது.பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தினால், இந்தியச்சந்தையிலிருந்து அந்நிய முதலீடு மேலும் வெளியேறும், ரூபாய் மதிப்பு மேலும் நெருக்கடிக்குள்ளாகி வீழ்ச்சி அடையும்.

இந்தியா ரேட்டிங்ஸ் ஆய்வு நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் சுனில் குமார் சின்ஹா கூறுகையில் “ அமெரிக்க பெடரல் வங்கி அறிவிப்பால், இந்திய ரூபாய் மதிப்பு 82 ரூபாய் வரை சரியலாம். ஆனால் சர்வதேச சூழலில் ஏற்படும் மாற்றம், கச்சா எண்ணெய் விலை குறைவு ஆகியவர்றால் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ரூபாய் மதிப்பு ரூ.78க்கு உயரும்” எனத் தெரிவித்தார்

பொருளாதார மந்தநிலையின் பிடியில் ஆசிய நாடுகள்: தூண்டிலில் சிக்காத இந்தியா: இலங்கை நிலை மோசாகும்

Due to hawkish central banks, the rupee may decline to 82 against the US dollar.

ஐசிஆர்ஏ ஆய்வு நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிருபணர் ஆதிதி நய்யார் கூறுகையில் “ டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு ரூ.81வரை சரியலாம். 2வது காலாண்டுக்குள் இதை எதிர்பார்க்கலாம். ரூபாய் மதிப்பு சரிவை, அந்நிய முதலீடும் நிர்ணயிக்கும். அந்நிய முதலீடு வரத்து அதிகமாக இருந்தால், சரிவு குறைவாக இருக்கும். பொருளாதாரமந்தம்  அச்சத்தால் டாலர் மதிப்புவலுவடைந்து வருகிறது” எனத் தெரிவித்தார்

நோமுரா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ இந்திய ரூபாய் மதிப்பு ஜூலை செப்டம்பர் மாதத்துக்குள் ரூ.82 வரை சரியக்கூடும். அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பு, கச்சா எண்ணெய் விலையில் மாற்றம், அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற்றம் முக்கியக் காரணங்களாக இருக்கும்”எனத் தெரிவித்தது

sbi : எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அலர்ட்! ஏடிஎம்-களில் பணம் எடுக்கும் முறையில் மாற்றம்

Due to hawkish central banks, the rupee may decline to 82 against the US dollar.

கிரிசில் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் தீப்தி தேஷ்பாண்டே கூறுகையில் “ நடப்பு நிதியாண்டு கடைசியில்தான் ரூபாய் மதிப்புக்கான நெருக்கடி குறையத் தொடங்கும். கச்சா எண்ணெய் விலையும் குறையும், அமெரிக்க பெடரல் வங்கியும் வட்டிவீதத்தை உயர்த்தி முடித்திருக்கும். 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூபாய் மதிப்பு ரூ.78க்கு உயரும்.

இது 2022, மார்ச் மாதத்தில் ரூ.76ஆகத்தான்இருந்தது. அதுவரை ரூபாய் மதிப்பில் பெரும் ஊசலாட்டம் இருக்கும்” எனத் தெரிவித்தார்.    

Follow Us:
Download App:
  • android
  • ios