Diesel price rises to Know how much today

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.66 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.10 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது.

இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக வருவதால், பொதுமக்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். 

கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை சிறிது சிறிதாக உயர்ந்துவரும் நிலையில், இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளது.

அதாவது, பெட்ரோல் லிட்டருக்கு 26 பைசாக்கள் அதிகரித்து ரூ. 74.66 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு 23 பைசா அதிகரித்து ரூ. 66.10 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.