DF crypto: cryptocurrency: இந்த கிரிப்டோ பற்றி தெரியுமா? பிட்காயின், டெரா மாதிரியில்லையாம்! இதை வாங்கலாமா?
DF crypto: cryptocurrency :பிட்காயின், டெரா, லுனா மாதிரி மதிப்பில் பெரும் ஊசலாட்டத்துடன் இல்லாமல் நிலையான மதிப்புடன், ஊசலாட்டம் இல்லாமல்ல, நல்ல லாபத்துடன் இருக்கும் பிட்காயின் பற்றி கேள்விப்பட்டதுண்டா. இது பற்றி தெரியுமா.
பிட்காயின், டெரா, லுனா மாதிரி மதிப்பில் பெரும் ஊசலாட்டத்துடன் இல்லாமல் நிலையான மதிப்புடன், ஊசலாட்டம் இல்லாமல்ல, நல்ல லாபத்துடன் இருக்கும் பிட்காயின் பற்றி கேள்விப்பட்டதுண்டா. இது பற்றி தெரியுமா.
டிஃபோர்ஸ்-( dForce) பெரும்பாலும் இதை டிஎப் என்று அழைக்கப்படுகிறது. டிஎப் காயின் என்பது, சமூகம்சார்ந்த, மையப்படுப்படுத்தப்படா, தன்னாட்சிமிகுந்த அமைப்பால் நடத்தப்படும் காயினாகும்.
சமீபகாலமாக கிரிப்டோ முதலீட்டாளர்களை அதிகமாக ஈர்த்து வருவது டிஎப் காயினாகும். அதற்கு காரணமும் இருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் டிஎப் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிரிப்டோகரன்ஸியில் பெரும்பாலான காயின்கள் பிட்காயின், டெரா, லூனாஆகியவற்றின் மதிப்பு குறைந்து ஏராளமான இழப்பு ஏற்பட்டநிலையில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான காயின் பக்கம் கவனத்தை திருப்புகிறார்கள்
DF Crypto என்றால் என்ன? முதலீட்டுக்கு பாதுகாப்பானதா?
டிஎப் கிரிப்டோ என்பது ஒரு சமூகத்தால் நிர்வகிக்கப்படுவதாகும். அதாவது டிஎப் காயினில் ஏதாவது மிகப்பெரிய மாற்றம் தேவையென்றால், டிஎப் டோக்கன் ஹோல்டர்கள் இணைந்துதான் நிர்வாகரீதியான முடிவு எடுப்பார்கள். யுஎஸ்எக்ஸ் ஸ்டேபிள் காயினை பின்பற்றி டிஎப் நிர்வகிக்கப்படுகிறது.
டிபோர்ஸில் தீவிர கோடிங் பாதுகாப்பு, பாதுகாப்பு தணிக்கை நம்பகத்தன்மை வாய்ந்த செர்டிக், கன்சென்சிஸ் டிலிஜென்ஸ்,ட்ரையல் ஆஃப் பிட்ஸ் ஆகிய நிறுவனத்தால் செய்யப்படுகிறது.இதில் செய்யப்படும் முதலீடு பெரும்பாலும் பாதுகாப்பானது எனக் கூறப்படுகிறது.
டிஎப் காயின் ஹைபிரிட்டானது. அதாவது சுதந்திரமான வர்த்தகம் அல்லது லாக்கிங் வசதியுடனும் நாம் வர்த்தகம் செய்ய முடியும். அதாவது முதலீட்டாளர்கள் அதிகமான லாபம் ஈட்டுவதற்காக ஒன்றாக சேர்ந்து எடுக்கும் முடிவாகும். இந்த வசதியால்தான் ஏராளமான முதலீட்டாளர்களை ஈர்த்துவருகிறது. ப்ரீஸ்டேக்கிங் மூலம் எந்த நேரத்திலும் டிஎப் காயினை விற்கலாம் என்பது சிறப்பம்சம்
டிஎப்-காயின் விலை என்ன?
டிஎப் காயின் இன்றைய விலை 0.0366 டாலராகும். அதாவது ஒரு காயின் விலை ரூ.2.85 பைசாவாகும். கடந்த 24 மணிநேரத்தில் 40 சதவீதம் விலை அதிகரித்துள்ளது. ஆனால், பிட்காயின் விலை 3.3.8% அதிகரி்த்து, ரூ.24.80 லட்சமாக இருக்கிறது. எத்திரியம் 3.85 % அதிகரித்து ரூ.1.71 லட்சமாக இருக்கிறது
டிஎப் கிரிப்டோவை எங்கு வாங்கலாம்?
யுஎஸ்எக்ஸ்(usx) அடிப்படையில், இந்த காயினை சர்வதேச பரிமாற்றங்களான பினான்ஸ்(binance), ஃபெமிக்ஸ்(phemex), ஹாட்காயின் குளோபல்(hotcoin global) உள்ளிட்டவற்றில் வாங்கலாம்.
டிஎப் கிரிப்டோவி்ல் முதலீடு செய்யலாமா உகந்ததா?
மற்ற கிரிப்டோ கரன்ஸியில் லட்சக்கணக்கில் முதலீடு செய்து திடீரென மதிப்பு இழந்துபெரும் இழப்பு ஏற்படுகிறது. அதோடு ஒப்பிடும்போது டிஎப் காயின் மதிப்பு நிலையானது, விலை குறைவானது. எலான் மஸ்க் போன்ற உலகப் புகழ்பெற்றவர்களால் அறிமுகப்படுத்தப்படும் டாக்ஜிகாயின் போன்று டிஎப் இல்லை.
டிஎப் மதிப்பு என்பது யுஎக்எஸ் ஸ்டேபிள்காயினோடு தொடர்புடையது. சந்தையில் நிலவும் மற்ற கிரிப்டோக்களைவிட, மதிப்பு ஊசலாட்டம் என்பது டிஎப் காயினில் மிகமிகக் குறைவு என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
கிரிப்டோகரன்ஸியைப் பொறுத்தவரை எந்தநேரத்தில் மதிப்பு இறங்கும், ஏறும் என யாருக்கும் தெரியாது, மதிப்பை நிர்ணயிக்கவும் முடியாது. ஆனால், யுஎஸ்எக்ஸ்காயின் அனைத்து சந்தை வல்லுநர்களாலும் அறியப்பட்டது, மதிப்புநிலையானது என்பது அனைவராலும் அறியப்பட்டது.
பெரும்பாலும் மோசமான இழப்பில் முதலீ்ட்டாளர்களைத் தள்ளாது. கடந்த வாரம் லூனா காயின் 97 சதவீத இழப்பைச் சந்தித்ததுபோல் டிஎப் காயினில் இருக்காது என்று கிரிப்டோ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். ஆதலால் டிஎப் காயினில் முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு என்றும், முதலீடு செய்யும் முன் சந்தை வல்லுநர்கள், ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற்று முதலீடு செய்யவும் வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.