கருப்பு பணத்தை டெபாசிட் செய்ய , மத்திய அரசு கடைசி வாய்ப்பை வழங்கி இருக்கு.அதாவது கரீப் கல்யாண் திட்டம் . இந்த திட்டத்தில் கடந்த 17 ஆம் தேதியிலிருந்து, வரும் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை, பழைய ரூபாய் நோட்டுகளை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் டெபாசிட் செய்தால் வரி என்ன ?

கருப்பு பணம் வைத்திருப்பதை ஒப்புக்கொண்டு, பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம். அவ்வாறு செய்யும் போது, 50 சதவீத வரியும், 25 சதவீத பணம் 4 ஆண்டுகளுக்கு வட்டியில்லா டெபாசிட் ஆகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

மீதமுள்ள 25 சதவீதம் பணம் மட்டும் , பெற முடியும்.

நோட் : டிசம்பர் 3௦ வரை ( நாளை ) மட்டுமே பொருந்தும்.

ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை டெபாசிட் செய்பவர்களுக்கு..?

மேலும், கரீப் கல்யாண் திட்டத்தில் முதலீடு செய்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே இந்த வாய்ப்பை பயன்படுத்த முடியும் . மேலும், ஒரு வேளை இந்த வாய்ப்பை பயன்படுத்தாதவர்கள், ரெய்டில் சிக்கினால், 137.25 சதவீத வரி செலுத்த வேண்டும் . மேலும் பல குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.