டாடா சன்ஸ் மற்றும் அதன் குழும நிறுவனங்களின் தலைவர் பதவியில் இருந்து விலக்கப்பட்ட சைரஸ் மிஸ்ட்ரி, தற்போது டாடா சன்ஸ் இயக்குனர் பொறுப்பில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து வேறுபாடு :

டாடா குழுமத்தின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த அவருக்கும், ரத்தன் டாடாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுஏற்பட்டதை தொடர்ந்து, டாடா சன்ஸ், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர் பதவியில் இருந்து, சைரஸ் மிஸ்ட்ரி அதிரடியாக நீக்கப்பட்டார்

ஒவ்வொரு பதவி இழப்பு :

சைரஸ் மிஸ்ட்ரி வகித்துவந்த ஒவ்வொரு முக்கிய பதவிகளையும் தொடர்ந்து, இழக்கத் தொடங்கினார். காரணம் எதுவுமே தெரியாமல், அடுத்தடுத்து பொறுப்புகளில் இருந்து விலக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சிக்கலுக்கு மேல் சிக்கல் தொடர்வதால், சைரஸ் மிஸ்ட்ரி அடுத்து என்ன செய்வார் என, கார்ப்பரேட் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.