crude oil price : கடந்த 2021-22ம் ஆண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவு இரு மடங்காக அதிகரித்து 11,900 கோடி டாலராக(ரூ.9.14 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.
கடந்த 2021-22ம் ஆண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவு இரு மடங்காக அதிகரித்து 11,900 கோடி டாலராக(ரூ.9.14 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.
உக்ரைன் ரஷ்ய போர்
உக்ரைன் ரஷ்யா இடையே ஏற்பட்ட போர் காரணமாவே கச்சா எண்ணெய் விலை இறக்குமதிச் செலவு அதிகரிக்க முக்கியக் காரணமாகும்.

உலகளவில் அதிகளவு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதில் 3-வதாக இந்தியா இருக்கிறது. கடந்த 2021-22ம் நிதியாண்டில் 11900 கோடி டாலர் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மத்திய அரசு செலவிட்டுள்ளது. இது கடந்த 2020-21ம்நிதியாண்டில் 6220 கோடி டாலராகத்தான் இருந்தது. ஏறக்குறைய இறக்குமதிச் செலவு இருமடங்காக அதிகரித்துள்ளது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் ஆய்வுக்குழுவான பிபிஏசி தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம்
உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக மார்ச் மாதத்தில் மட்டும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா 1370 கோடி டாலர் செலவிட்டுள்ளது. ஏனென்றால் அப்போது கச்சா எண்ணெய்விலை கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவு பேரல் 140 டாலராக உயர்ந்திருந்தது. இது 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக 840 கோடி டாலர் மட்டும்தான் செலவிடப்பட்டது.

கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் இன்னும் குறையவில்லை. ஏற்ற இறக்கத்துடநே நகர்ந்து வருகிறது, பேரல் 106 டாலராக இருக்கிறது. ரஷ்யா உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராதநிலையில் வரும் நாட்களில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது
கடந்த நிதியாண்டு
பிபிஏசி அறிவிப்பின்படி, “ 2021-22ம் ஆண்டில் இந்தியா 21.22 கோடி டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. இது 2020-21ம் ஆண்டில் 19.65 கோடி டன் கச்சா எண்ணெய்தான் இறக்குமதிசெய்தது. கொரோனாவுக்கு முன்பு 22.70 கோடி டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. 2019-20ம் ஆண்டில் கச்சாஎண்ணெய் இறக்குமதிக்காக மத்திய அரசு, 10140 கோடி டாலர் செலவிட்டது.

இந்தியாவுக்குத் தேவையான கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலும் சவுதி அரேபியாவிலிருந்து இறக்குமதியாகிறது. 2021-22ம் ஆண்டில் இந்தியா 20.27 கோடி டன் பெட்ரோலியப் பொருட்களை நுகர்ந்துள்ளது, இது கடந்த 2020-21ம் ஆண்டில் 19.43 கோடி டன் பொருட்களை பயன்படுத்தியுள்ளது. ஆனால், கொரோனாவுக்கு முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையில் இது குறைவு, அப்போது 21.41 கோடி பெட்ரோலியப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
