இன்னும் இரு ஆண்டுகளில் பேட்டரி காரின் விலையும், பெட்ரோலில் இயக்கப்படும் காரின் விலை இணையாகவே இருக்கும் என்று மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறைஅமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்

இன்னும் இரு ஆண்டுகளில் பேட்டரி காரின் விலையும், பெட்ரோலில் இயக்கப்படும் காரின் விலை இணையாகவே இருக்கும் என்று மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறைஅமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் மானியக்கோரிக்கை மீது இன்று நடந்தவிவாதத்தில் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில்அளித்தார். அப்போது அவர்பேசியதாவது:

இப்போதுள்ள நிலையில் நமக்கு விலைகுறைவான, உள்நாட்டிலேயே தயாரிக்கக்கூடிய எரிபொருள்தான் வாகனங்களை இயக்கத்தேவை. இந்த எரிபொருள் விரைவி்ல் நமக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன். காற்றின் மாசுவைக் குறைக்க வேண்டும், டெல்லியில் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலையும் மேம்படுத்த வேண்டும்.

போக்குவரத்து துறையில் ஹெட்ரஜன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு எம்.பி.க்களும் தங்களின் தொகுதியில் இந்த தொழில்நுட்பத்தைபற்றி செயல்படுத்த முயற்சி எடுக்க வேண்டும். கழிவுநீர் ஓடையில்செல்லும் தண்ணீரை சுத்தமான பசுமை ஹெட்ரஜனை உற்பத்தி செய்ய முடியும். பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக ஹெட்ரஜன் மிகவும்விலை குறைந்த எரிபொருளாக விரைவில் வரும்.

இன்னும் அதிகபட்சம் 2 ஆண்டுகள்வரை காத்திருங்கள். பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டர், கார், ஆட்டோ ஆகியவையும், பெட்ரோலில் ஓடும் ஸ்கூட்டர், கார், ஆட்டோ ஆகியவற்றின் விலையும் ஒரே மாதிரியாக மாறும். லித்தியம் பேட்டரியின் விலையும் குறைந்துவிடும்.

ஜிங்க்-அயனி, அலுமினியம்-அயனி, சோடியம்-அயனி மின்கலங்களை வேதியியல் முறையில் உருவாக்கி வருகிறோம். பெட்ரோலுக்காக ரூ.100 செலவு செய்தால், பேட்டரி வாகனங்களுக்கு ரூ.10 செலவு செய்தாலே போதுமானதாக இருக்கும். அந்த சூழலைஉருவாக்குவோம்.

இவ்வாறு நிதின்கட்கரி தெரிவித்தார்